மே தின வாழ்த்துக்கள்

Vinkmag ad
மே  தின வாழ்த்துக்கள் .

உழைப்பின் பெருமையை அறிவோமே 

உழைத்தே உயர்வினைப் பெறுவோமே .
உழைத்தால் நன்மை  கிடைத்திடுமே .
உழைத்தல் உடல்நலம்  காத்திடுமே .
உழைத்தல் திருப்தி அளித்திடுமே 
உழைத்தால் உணவு செரித்திடுமே .
உழைத்தல் உரிமைகள்  காத்திடுமே .
உழைப்பாளிகளை  எந்நாளுமே . 
உலகம் போற்றிப்புகழ்ந்திடுமே .
 
உழவன்  உழைப்பில் உலகமே 
உணவுப்பசியை  வென்றிடுமே .
ஆசிரியர்களின் உழைப்புதான் 
அறிவுப்பசியைப் போக்கிடுமே   
ஆலைத் தொழிலாளர் உழைப்பினிலே 
ஆலைகள்  என்றும் வளம்பெறுமே . 
ஒவ்வொரு தொழிலும் மேம்படவே 
உழைப்பே என்றும் அடித்தளமே . 
 
உழைப்பில்லையேல்  இயக்கமில்லை  
பிழைப்புமில்லை ,  பெருமையில்லை , 
வாழ்வுமில்லை , வளமுமில்லை , 
என்பதை நமக்கு உணர்த்திடவே 
மே மாதத்தில்  முதல் தினமே 
உழைப்பாளர் தினம் ஆகிடுமே . 
 
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

சிற்றிதழ்: சிறுகதை

Read Next

உழைப்பாளர் தினம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *