மே தினம்

Vinkmag ad

மேதினம்

 

திருச்சி A .முஹம்மதுஅபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

  • “மேதினம்” என்பதெல்லாம்

மேடையில்தான்

உழைக்கும் மக்கள் நிலையோ

பாடையில்தான்!

 

  • இருபதாம் நூற்றாண்டில்

நீங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றிருக்கலாம்!

இருபத்தோறாம் நூற்றாண்டில்

நீங்கள் கம்பெனிகளாதிக்கத்தில்அடிமையாகி விட்டீர்கள் !

 

 

 

  • அக்கறையோடு வேலைப் பார்த்த

தொழிலாளருக்கு சம்பளத்தை விட

அதிகமானது  சர்க்கரை !

அல்லும் பகலும் மிகுந்த உழைப்பு,

அவருக்கு,

அதிகமானது இரத்தக் கொதிப்பு!

 

  • சிறைச்சாலைகளில்

மக்கள் அடைக்கப்படுகிறார்கள்!

தொழிற்ச்சாலைகளை

மக்களே அடைந்துக் கொள்கிறார்கள்!

 

  • ஆற்றின் ஆழப்பகுதி

முதலைகளால் ஆபத்து !

ஆற்றின் ஓரப்பகுதி

முதலாளிகளால் ஆபத்து!

  • கார்ப்பரேட் உலகில்

கல்நெஞ்சங்கள்!

சிலர் இனம் பார்த்துதான்

வேலைக்கு சேர்க்கிறார்கள்!

அரசு அலுவலகங்களில்

தலைவிரித்தாடும்  இலஞ்சங்கள்!

பணம் வாங்கித்தான்

பணிக்கு சேர்க்கிறார்கள்!

 

  • தொழிலாளர்கள்

தொழிற் கட்சிகளுக்கு ஒட்டு  வங்கி!

தொழிலதிபர்களுக்கு நோட்டு வங்கி!

 

  • சுரங்கங்களில் இறங்கி

தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்!

அரங்கங்களில் ஏறி

தொழிலதிபர்கள் விருது வாங்குகிறார்கள்!

 

  • கல்மண்ணை சுமந்து

இவர்கள் கஷ்டப்படுகிறார்கள்!

கல் மனம் படைத்தவர்கள்

கூலி சரியாக தருவதில்லை!

 

  • சம்பளம் கூட கேட்டால்

தர மறுக்கிறார்கள்!

சாவு கூட இப்போதெல்லாம் விடுமுறையில்தான்

வரவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்!

 

  • சரக்கு

இறக்குமதி செய்யப்பட்டது !

இரக்கம்

ஏற்றுமதி செய்யப்பட்டது !

***************************************************************************

 

News

Read Previous

உழைப்பாளர் தினம் !

Read Next

கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *