மூடனின் கிளிக் கூண்டில்

Vinkmag ad

மூடனின் கிளிக் கூண்டில்

 

திருச்சி A.முஹம்மது காசிம்

tiruchykhasim@gmail.com

 

  • படித்தவன்

 

கணினியில் ஜோசியம் பார்க்கிறான்!

பாமரன்

 

கரடி ஜோசியம் பார்க்கிறான்!

  • தனது விதியே தெரியாமல்

 

வீதிக்கு வந்த ஜோதிடன்

 

சொல்கிறான் மற்றவனுக்கு,

 

நாளை தேதியில் நடப்பது குறித்து !

 

 

  • சோம்பேறிக்கு

பூனை குறுக்கே போனாலும்

கெட்ட நேரம் தான்!

சாமார்த்தியக்காரனுக்கு

எல்லா நேரமும்

நல்ல சகுனம் தான்!

  • மூடன் வைத்திருக்கும்

    கிளிக் கூண்டில்

    ஆறு அறிவை அடகுவைக்கிறான்

படித்தவன்!

 

  • பொண்ணுக்கு ,

 

மாப்பிள்ளை பொருத்தமும் ,

 

சுப ராகும்  பார்த்துதான்  கல்யாணம் நடந்தது!

 

ஆனால்,

 

அதுவோ,

 

வெகு சீக்கிரமாய் விவாகரத்தில் முடிந்தது !

 

 

  • உனக்கு கண்டம் என்று

 

ஜோசியன் பேச்சைக்கேட்டு

 

தன்னை தானே அழித்துக் கொண்டவர் பலர்!

 

ஆம்

அவர்களின் வாழ்க்கை

 

தற்கொலையில் முடிந்தது!

 

  • ஜோதிடன்

 

படிச்சவனுக்கு கூட தெரியாத

 

பல வித்தைகளை காட்டுவான்!
தன் பாச்சா பழிக்கும் வரை,
எல்லோரையும்

ஏமாற்றுவான்!

*********************************************************************

News

Read Previous

பூத்திருக்கும் புத்தாண்டு

Read Next

Bank Workers Unity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *