புனித ரமலான் வாழ்த்துக்கள்

Vinkmag ad
புனித ரமலான் வாழ்த்துக்கள்
 
அன்பை போதிக்கும் மதம் – மனிதப் 
பண்பை போதிக்கும் மதம் – மனித
நேயம்  போதிக்கும் மதம் -புனித 
அறத்தை போதிக்கும் மதம் – இனிது 
வாழ வழி காட்டும் மதம் – உலகில் 
இஸ்லாம் மதம்தானே  .
 
 
அல்லாவின் அருளால் அகிலம்தன்னில் 

எல்லா வளமும் நிறைந்தவரெல்லாம்
இல்லாதவர்க்கு ஈந்து மகிழ
நல்லதோர் காலம் ரமலான் மாதம் .

உதயம்கா முதல் அஸ்தமனம் வரை 

உண்ணாமல் , குடிக்காமல் உபவாசமிருந்து

காலம் தவறாது தொழுகை செய்து

மாலையில் நோன்பு  திறக்கும் பொழுது
மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும்

நல்லதோர் காலம் ரமலான் மாதம் .
 
அல்லா  அவர்கள் ஆணையின் படியே 
அண்ணல் நபிகள் காட்டிய வழியில்
எல்லா உயிர்க்கும் தோழமைகாட்டி
நல்லவராக வாழச் செய்வதும்

இஸ்லாமியர்கள் அனைவரும் வேறு
எந்த மதத்தவராயினும் அவரை
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று வணங்கி
அன்பைக் காட்டுதல் அருமையன்றோ.

 திருக் குர் –  ஆன்  தன்னை தினமும் ஓதி
திசை தனைத்   தொழுது   பிறை தனைக் கண்டு
 மறையதன்  வழியில் மனிதனாய் வாழ்ந்தால்

குறையிலாதிருக்கும்  குவலயம் தானே.

இனிய  ரம்ஜான்( ரமலான் ) வாழ்த்துக்கள் 

அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

 

News

Read Previous

பெருநாள்…

Read Next

தமிழின் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *