வருக , வருக 2015

Vinkmag ad

புத்தாண்டு  வாழ்த்துக்கள்

எண் மாற்றம் நமது  வாழ்வில் 
ஏமாற்றம் தவிர்க்கும் ,இனி  
ஏற்றம் தரும் என்னும் 
எதிர்பார்ப்பும்  தருகிறது .
 
நம்பிக்கை உள்ளவர்க்கு 
நல்  மாற்றம் வருகிறது 
நம்பிக்கையற்றவர்க்கோ 
தடுமாற்றம் தான் மிஞ்சும். 
 
மாற்றம் நிலையானது கால   
மாற்றத்திற்கேற்ப  தன்னை 
மாற்றிக் கொள்பவரே -நிலை 
மாற்றம் காண்பார்கள்   
 
கையை நம்பி உழை -தன் 
னம்பிக்கை இழக்காதே 
நன்னம்பிக்கை முனை-நம் 
மனதில்தான் இருக்கிறது 
 
கடந்த ஆண்டின் தவறுகளை 
இவ்வாண்டு திருத்திக்கொள் 
கடந்த ஆண்டின் தோல்விகள் 
இவ்வாண்டின் பாடங்கள் 
அனுபவமாய்க் கொண்டு  உன் 
அடுத்த செயல் திட்டமிடு. 
 
ஆண்டுகள் போகப் போக 
வயதும் கூடிவரும் 
வயது கூடக் கூட 
அனுபவமும் கூடி வரும் 
அனுபவம் கூடக்கூட 
அறிவும்கூடி விடும்  
அறிவு கூடக் கூட
 அனைத்திலுமே வெற்றியன்றோ 
எதிர்வரும் புத்தாண்டில்   
 
பஞ்சம் ஒழியட்டும் 
லஞ்சம் ஒழியட்டும் 
வஞ்சம் ஒழியட்டும் 
நெஞ்சம் மகிழட்டும் 
 
கெடுமதியாளர்  நன்மதி பெறட்டும் 
சிறுமதியாளர் பெருமதி பெறட்டும்
நன்மதியாளர் நாடாளட்டும்
மனமதில் அமைதி நிறைந்திருக்கட்டும் 
 
வாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன் , 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
rajamsethu@gmail.com

News

Read Previous

வாரச்சந்தை நாளன்று முதுகுளத்தூரில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு

Read Next

ஜனாப் செய்யது முஹம்மது வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *