பச்சைத் தமிழன் காமராசர்

Vinkmag ad
” பச்சைத்  தமிழன்  காமராசர் “
அறிமுகம்;
உருவாகிவிட்ட   பின்எனக்கு  இருவர்இட்ட பெயர்கந்தையா
திருவாகச்  சேர்த்திட்ட  பெரும்பெயர்  இளையவன்-செயா
திருச்செல்வம்  தேடப்பணி ஒருஆங்கில  நாளிதழ்
விருப்பமான  தொழில்  பொறுப்பானபணி   37ஆண்டுகள்
பொறுப்பான  மக்கள்  இருவரோடு  ஒருவர்மூவர்
சிறப்பான  தொழில்  சீரியவாழ்க்கை  வாழ்கின்றனர் .
பொறுப்புடன் என்னைப்   பொன்றும்வகை  காக்கின்றனர்
இணையை  இழந்து  இருக்கின்ற   துணைஒற்றைப்
பனையாக வாழ்ந்து நனைகின்றேன்  தமிழில்
இருப்பதோ எச், எம், எசு. பெருங்குடியிருப்பு  மதுரைஇப்போ
திருப்பதோ உங்கள்  திருமுன்எனக்  கூறிதொடர்கிறேன்
வானாகி  மண்ணாகி  வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி  யான்எனது  என்றவரிவரைக் கூத்தாட்டு
வானாகி  நின்றவனை  வாழ்த்துவமே !  இதற்கு
மாறாகிய  சொல்லைநல்  மனதாகிய  மக்களிடம்
நேராகிய  நெஞ்சத்துடன்  கொஞ்சம்   கூறுகிறேன்!
ஊனாகி  உயிராகிக்  கருவாகி  உருவாகி
தானேகி  வெளியாகி  ஆளாகி  வளர்வாகி
திறனாகி  உரனாகி  தீந்தமிழ்மக னாகிஎதையும்
தானாகிடச்  செய்யாது  தமிழர்க்காக்கி தமிழ்மண்ணின்
கோனாகிக்  கொலுவிருந்து  கொள்கையில்  இறுக்கமாகி
வீணாகிப்  போகாதுவிந்தி யமும்தாண்டி இந்தியத்தின்
தூணாகி  ஆள்வோரைத்  தெரிந்தெடுக்கும்  தலைவனாகிபின்
ஏணியாகி இருந்தாரை  எட்டிஉதைக்கும் இழிசெயலால்
புண்ணாகிய  பொன்மனத்தைப் புறமொதுக்கிச் சிறையடைக்கும்
எண்ணமாகிய  ஆணையை  எடுத்தெறிந்து ஆட்சியே
காலியாகிப்  போனாலும்  காட்சிக் கெளியாரைக்
கைதாக்கிக்  கடுஞ்சிறைக்குள் விடுவேனோ என்றகலைஞர்
விலையாகிப்  போகாது  விருதைப்  பெருமகனாம்
தலைகவிழா தகுதலைவரைத் தாங்கினாரே !  அந்த
” கண்ணுடையார்  என்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார்  கல்லா   தார் ”  என்றகுறளுக்குப்
பெருமை  சேர்த்த  பொற்றமிழ்  மகனுக்கு
எச்சம்  பலபெற்ற கொச்சைத்தமிழ் பேசும்பெரியார்
இச்சைக்குகந்த  ” பச்சைத்தமிழர் ”  காமராசர்  என்றே
அச்சமின்றிக்கூறிய  இச்சைக்குரிய தந்தை ஆசையினை
கச்சைகட்டி  வந்தோரை  கடிதில்  புறமொதுக்கி
பச்சைத் தமிழரும்  பட்டறிவுப் பெட்டகமானவர்க்கு
” மதுரைக்  காமராசர்  பல்கலைக்  கழகம் “என்றே
தேமதுரச்  சொல்லால் தீந்தமிழ்  பெயர்சூட்டி
தூயதமிழ்  அண்ணாமனித நேயத்துடன் பெயரிட்டார்அந்த
விழுப்பெருமை யுற்றபெரும்  பழுமிகுஆல  மரத்தின்
விழுதுகளாகிய நாமென்றும் பழுதில்லா வகையில்
தொழுதுவணங்கிட தமிழின்  தொல்பெருமைக்  குறியாரை
பெருமைப்  படுத்தி  திருமிகுகல் விக்கண்திறந்த
கருமவீரராம் காமராசரைக்  கைகூப்பி  வாழ்த்துவமே !
கூடுதல் வரி;
    அப்பெருமகன்  பிறந்த( சூலை 15 )  திருநாள்தான்  எனக்குப்
    பெருமை சேர்க்கும்நாள்என் பிறந்தநாள் ! எனநிறைவுறுகிறேன்

News

Read Previous

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது

Read Next

ஜூலை 15 : பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்

Leave a Reply

Your email address will not be published.