நூறாவது நாள்

Vinkmag ad
நூறாவது நாள்  
ஊரடங்கு அறிவிச்சு

நூறு நாளு ஓடிப்போச்சு

ஊருலகம் ஆடிப்போச்சு
பாரு முழுசும் நாறிப்போச்சு
தொழிலெல்லாம் நசிஞ்சி போச்சு
தொழிலாளர் பொழப்பு  போச்சு
நிலைமை  கையை மீறிப்போச்சு
தலைமையெல்லாம் துவண்டு போச்சு
வீதியெல்லாம் நரகமாச்சு
வீடு இப்போ சொர்க்கமாச்சு
கூடியெல்லாம் உக்காந்து
கூட்டாஞ் சோறு திங்கலாச்சு  .
வீட்டிலிருந்து வேலை செஞ்சு
வீண் செலவைக் குறைச்சாச்சு .
வரி வருமானமெல்லாம்
வைத்தியத்துக்கு செலவாச்சு
இலவசங்கள் பெருகிப்போச்சு
விலைவாசி ஏறிப்போச்சு .
குடி கெடுக்கும் குடியைக்கூட
கொஞ்சகாலம் நிறுத்தியாச்சு.
இடுகாடும், சுடுகாடும்
இடமின்றி நிறைஞ்சுபோச்சு .
எந்த ஜாதி, எந்த மதம் ,
என்ன பதவி, எவ்வளவு சொத்து
என்றெதுவும் பாராமல்
எல்லோரையும் தாக்குது
கூலிக்காரன் பொழைப்பு
இப்போ நாறிப்போச்சு – பல
கோடீஸ்வரன் நிலைமைகூட
கொஞ்சநாளில் மாறிப்போச்சு ,
தொட்டால் பரவுமென்றார்
தும்மினால் பரவுமென்றார்,
கைகளைக் கழுவு என்றார்
கவசம் போடு என்றார் – முகக்
கவசம் போடாவிட்டால்
திவசம்தான் நடக்குமென்றார் .
தனிமைப்படுத்திக்கொள்
தடுக்கலாம் பரவல் என்றார்.
அல்லா  , இயேசு, ஈசன் ,
அத்தனை சாமிகளும்
பக்தனைக் காக்காமல்
பரிதவிக்க விட்டுவிட்டார் .
மரணம் அரவணைக்கும்
தருணம் இதிலிருந்து
மனிதரைக்காப்பாரோ ?
மருந்தொன்று தருவாரோ ,
என்று தணியும் இந்த
கொரோனாவின் தாக்கம்,
என்று கிடைக்கும் எமக்கு
நிம்மதியான தூக்கம்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

சிந்தனை

Read Next

சாபி மதமும் அனபி மதமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *