நிழலும் நிஜமும்

Vinkmag ad

வான வில்லை முகப்பாய் கொண்டு

வானத்தில் மிதக்கின்ற மாளிகை.

மாளிகையை தழுவுகின்ற மேகங்கள்.

டைனோஷர் பறவை என் வாகனம்-அதில்,

வானலாவ பறந்து சென்று

விண்ணின் விசித்திரங்கள் கண்டேன்.

வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன்

வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன்.

விண் மீன்களை எடுத்து வந்து,

அலங்கார தோரணமிட்டேன்.

மேகத்தில் விதை விதைத்து,

வெள்ளாமை செய்தேன்.

மேகக்கூட்டத்தை குடி நீராக்கி,

வினியோகமும் செய்தேன்.-இப்படி

கடிவாளமில்லாமல் ஓடுகின்ற,

கற்பனைக் குதிரைதான் நிழலோ?

அதனால்தான் காலைக் கதிரவன்,

நிழலை காததூரம் காட்டுகின்றானோ?

நிஜத்தின் நிகழ்வுக்கு வ்ந்தேன்,

இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது,

இந்தியா பங்ளா தேஷை வென்றது.               

இந்தியா வெஸ்ட் இந்தீஸையும் வென்றது.

இந்தியா பாகிஸ்தானையும் வென்றது.

இந்தியா ஸ்ரீலங்காவையும் வென்று,

உலகக் கோப்பையையும் வென்றது.

வீழ்வதோ மற்ற நாடுகள்,

வெல்வதோ நமது நாடு. வாழ்க, வளர்க வல்லரசாகுக.

             தங்கள் அன்புள்ள மு.செய்யது உசேன். 0554908382.

News

Read Previous

தமிழ்க்கல்​வி இணையப்பக்க​ம்

Read Next

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *