நிறைமதி

Vinkmag ad

நிறைமதி

முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வாசங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை ,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் – ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106).
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
————-
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram – 623701,

Paramakudi Taluk,

Ravananathapuram District,

Thamizhnadu.

Mobile: 8754962106

***
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.

News

Read Previous

சோபனக் கும்மி

Read Next

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *