நாமும் கலாம் ஆகலாம்!

Vinkmag ad
நாமும் கலாம் ஆகலாம்!
எல்லோருமே கல்வி கற்கலாம் – ஆனால்
திட்டமிட்டுக் கற்றோமெனில் நாமும் கலாம் ஆகலாம்!
எல்லோரும் பொருளீட்டவே உழைக்கலாம் – ஆனால்
உழைப்பு என் நாட்டிற்காகவே என்றால் நாமும் கலாம் ஆகலாம்!
எல்லோரும் கதைபேசி காலம் கழிக்கலாம் – ஆனால்
கதையாக உருவாக நாமுழைத்தால் நாமும் கலாம் ஆகலாம்!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு சொல்லி மகிழ்விக்கலாம் – ஆனால்
அதைக் கட்டாயம் வாழ்வில் கொண்டால் நாமும் கலாம் ஆகலாம்!
அடுக்குமொழிபேசி அழகாய் மேடையை அலங்கரிக்கலாம் – ஆனால்
கண்ணியத்துடன் கனிவாய் பேசினால் நாமும் கலாம் ஆகலாம்!
இப்புவியின் மேல்வந்து யாரும் பிறக்கலாம் – ஆனால்
இப்புவியைக் காக்க ஒருமரம் நட்டால் நாமும் கலாம் ஆகலாம்!
கண்மூடித் தூங்குவோரனைவருக்கும் கனவு வந்துபோகலாம் – ஆனால்
கண்மூடச் செய்யா கனவு கண்டால் நாமும் கலாம் ஆகலாம்!
அவர் கொண்ட நற்குணங்கள் எங்கும் விதைக்கலாம் – வாருங்கள்
நம் இந்தியாவை வல்லராசக்கி வாழ்ந்தும் பார்க்கலாம்!

Regards,
Rafeeq.
+971506767231

News

Read Previous

தொழில் – பயணிகள் படகு சவாரி

Read Next

புரட்சியின் பூபாளம்

Leave a Reply

Your email address will not be published.