நவீன உலகம்

Vinkmag ad

திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 கொலை மிரட்டல் விடுக்கும்

தொலைப்பேசிகள்!
காம வலை வீசும்
அலைப்பேசிகள்!

 வதந்திகளைப் பரப்பும்
தந்திகள் !
பீதிகளைப் பரப்பும்
செய்திப்பத்திரிக்கைகள்!

 

 

 கைரேகையிலிருந்து மாறி
கணிப்பொறியில் ராசி பலன் பார்க்கும் மனிதர்கள் !
 முற்காலத்தில்
பெண்கள் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருந்தர்களாம்
அழகிப் போட்டியில்
அனைவரையும் வென்ற மிஸ் வேர்ல்டு சொன்னார்!

 ஆபாசக் காட்சிகளை வழங்கும்
தொலைக்காட்சி முன்
பாசமுள்ள தந்தையும் மகனும் !

 தந்தையை சுட்டுக்கொன்ற
வீரத்திருமகன்?
தவறான உறவு தன சக மாணவனுடன்
கர்ப்பமான சிறுமி!
 விலங்குகள்
வீட்டின் செல்லப்பிள்ளைகள்!
குழந்தைகளுக்கு
நலக்காப்பகங்கள் !
 கற்புகள் விற்பனைக்கு
சிவப்பு விளக்குப்பகுதிகள் !
குழந்தை பெற்றுத்தரும்
வாடகை தாய்மார்கள் !

 நீதிமன்றங்கள்!
ஆண் – பெண் இல்லற பிரச்சினையில்
விவாகரத்து வழங்கி பிரிப்பு!
ஓரினச்சேர்க்கை உரிமையென
வித்தியாசமான தீர்ப்பு !

 விசாரிக்காமலே
அடைக்கும் சட்டங்கள் !
விசாரணை மட்டுமே மேற்கொள்ளும்
மனித உரிமை கமிஷன்கள்!

 சாலையில் அடிப்பட்டு கிடப்பவரை
கருணையோடு சூழ்ந்துப் பார்க்கும் மனிதர்கள் !
இறந்த மனிதரை
விரைவாக தூக்கி செல்லும்
அவசர ஊர்திகள் !

 

 கல்வி உலகில்
ராகிங் ஈவ்டீசிங்
பண்பாடு
படும்பாடு !

 படிக்கும்போதே மேலாளராகி
மேஜையிலமர்ந்து
கையெழுத்து போட்டதாக கனவு !
பாதையில் எச்சில் துப்ப
திரும்புபவளும்
தன்னையே பார்ப்பதாக நினைவு !
 சமூக துயரங்களை
சற்றும் ஆராய நேரமில்லை!
முனைவர் பட்டத்திற்காகவே
ஆராயும் முற்ப்போக்கு காலமிது !

 

 கலைப்பொருட்கள் சிதைக்கப்படும் போது
எழும்பும் போர் குரல்கள்!
அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை
கண்டுகொள்ளாத உலகமிது !

 அணுகுண்டு போட்டு அழித்த நாடுகள்
வேற்று நாட்டில்
அணு ஆயுதத்தை தேடி சோதனை !
அமைதி ஏற்பட வில்லையே
தாக்குதலுக்கு ஆணையிட்டு
அமெரிக்க அதிபர் வேதனை !
 மண்ணில் மக்களை
கொன்று குவிக்கப் புறப்படும்
நாசகார பென்டகனின் விமானங்கள் ஒருபுறம் !
விண்ணில்
உயிர் இருக்கிறதா என தேடிப் புறப்படும்
நாசாவின் விண்கலங்கள் மறுபுறம்!!

 

 நாகரீகம்
கற்கால மனிதர்கள்
இலைகளைப் போர்த்தி
இடையினை மறைதுக் கொண்டார்கள் !
நாகரீக மனிதர்களாம்
ஆடைகளை அவிழ்ந்து
அம்மணமானார்கள் !
 பெண் சுதந்திரம்
ஆடைகளிலிருந்து
பெண்ணுரிமை
பெண்ணை வேலைக்கு அனுப்பி
அவள் மீது
சமுதாயம் சுமத்திய கடமை !

 மக்களாட்சி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர்கள்
பரம்பரை அரசியல்
அரசக் குடும்பங்கள்!
தேர்தலில் தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் !
ஆயிரமாயிரம் மக்களை
அடக்கும் மாவீரர்கள் !
 நவீன உலகத்தை
நான் ஆராய்ந்த போது
எனக்கு நினைவுக்கு வந்தது
இந்த உலகம் வீணும் விளையாட்டுமே அன்றி வேரில்லை
என்ற அல்குர்ஆன் வசனம்!

 

 

News

Read Previous

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

Read Next

தியாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *