நட்பு வாழ்வின் நறும் பூ!

Vinkmag ad

நட்பு வாழ்வின் நறும் பூ!

தோளுக்கு துணையாகும்
தோழன் – அவன்
துன்பத்தை துடைக்க வரும் பண்
பாளன்!

அன்பைச் சொரிவதிலே
மாரி – அவன்
ஆபத்தில் வழங்கிடுவான்
வாரி!

நெருக்கடியில் கை கொடுக்கும்
நேயன் – அவன்
நேர்மையிலே தோய்ந்து விடும்
தூயன்!

பணம் பார்த்து பழகுவதல்ல
நட்பு – நல்ல
குணம் பார்த்து பழகுவதே
நட்பு!

இன்பத்தில் மட்டும்
இணைவதல்ல நட்பு!
துன்பத்திலும்
தொடர்வதே நட்பு!!!
நன்றி:சகோதரி
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

News

Read Previous

மணிச்சுடர் நாளிதழ்

Read Next

விடுதலைத் திருநாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *