தேசத்தந்தையே !

Vinkmag ad

தேசத்தந்தையே !
====================================ருத்ரா

தேசத்தந்தையே!
எந்த ஆண்டும் இல்லாமல்
இந்த ஆண்டுதான்
உன் வெறுமையை
அதில் தகிக்கும் அக்கினிக்குழம்பை
தாங்கவொண்ணாமல்
நாங்கள் தவிக்கிறோம்.
“ஹே ராம் என்று
கூப்பிட்டாயே
அந்த ராமனிடம் கேள்
ஓ ராமா !
உன் ராஜ்யத்தில்
செங்கோல் என்றால்
கடப்பாரையா
என்று கேள்.
ஈஸ்வர அல்லா தேரே நாம்
என்றேனே
உனக்கு இந்தி தெரியாதா ?
என்று கேள்.
உன் தராசு தட்டுகளில்
ராமரும் பாபரும்
ஒன்றாய்த்தானே இருந்தார்கள்.
இவர்கள் தராசுகள்
தடம் புரண்டது
ஏன் என்று கேள்?

“டுமீல் டுமீல்”
அந்த துப்பாக்கியில் இன்னும்
குண்டுகள்
பாக்கியிருந்தது போலும் !

“உன்னை எத்தனை தடவைகள்
சுட்டாலும் நீ
சாக மாட்டாய் போலிருக்கிறது!”
அந்த ராம்
இன்னும் உறுமிக்கொண்டிருக்கிறான்.
அட!
தேசத்தந்தை தேசத்தந்தை
என்று இவர்கள்
மலர் தூவிக்கொண்டிருப்பது
இந்த “ராம்”க்கு த் தானா?

ஹே ராம்!
நம் தேசத்தந்தை
மீண்டும் மண்ணில் வீழ்ந்தார்!

News

Read Previous

கல்வி உதவித் தொகை

Read Next

பவர்பாயின்ட் -ல் Hydralic system அனிமேஷன் செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *