திரிபுரா

Vinkmag ad
திரிபுரா
======================================================ருத்ரா
மதம் ஒரு அபினி என்றான்
அந்த புரட்சித்தலவன்.
அதனால் தான்
தந்திர வலைகள் பின்னிய‌
மதவெறியர்கள்
அந்த சுண்டைக்காய் மாநிலத்தையும்
சுட்டெரிக்கக் கிளம்பினார்கள்.
ஓட்டுப் போட்ட‌ ஈரம் காயவில்லை
அதற்குள்
சமுதாய விடியல் தந்த‌
சரித்திரத்தின் சுடர் உருவாய் நின்ற‌
அந்த “லெனின்” சிலையை
வீழ்த்தினார்கள்.
முட்டாள்கள்.
இவர்கள் மேற்கிளையில் நின்று
அடிக்கிளையை வெட்டுகிறார்கள்.
சரித்திரம் மீண்டும்
அக்கினி ஆறுகளை ஓடச்செய்யும்.
விலையைப் பற்றிய‌
பொருளாதார நுட்பம் சொல்பவர்கள்
பொது உடைமைக்காரர்கள்.
அவர்களுக்கும்
பணம் பத்தும் செய்தது
சம்பளம் என்ற பெயரில்.
ஓட்டுகளின் வயிற்றுக்குள்
இருந்த பசியை
ஒரு ராட்சசப்பசியாக
மாற்றும் சூழ்ச்சிகள்
திரிபுராவில் அரங்கேற்றம் ஆனது !
முதல்வரோ
இந்தியாவிலேயே மிக குறைந்த சொத்து
உள்ள முதல்வர்.
இந்த செங்கொடியை எதிர்த்து
எந்த செங்கொடி சம்பள உயர்வு கேட்கும்?
கேட்கவில்லை.
4 ஆவது சம்பளக்குழுவுக்குபிறகு
உள்ள சம்பளங்களைப் பற்றி
ஊழியர்கள் சிந்திக்க வில்லை போலும்.
7 வது சம்பளக்குழு வந்த பிறகும்
திரிபுராவில்
மார்க்சிசம் மட்டுமே தான் சம்பளம்.
அப்படி இருந்த தோழர்களின்
நெஞ்சில் காவி நஞ்சு ஊற்றியது.
உடனடியாய் ரூபாய் 15000க்கு
சம்பள உயர்வுக்கு
ஆசை காட்டி போதை ஏற்றியது.
இருப்பினும் மக்கள் மசியவில்லை.
பாவம் மரணத்தின் சம்பளம் என்று தான்
பர மண்டலத்து பிதா சொன்னார்.
சர்வாதிகார சைத்தான்களோ
ஜனநாயக மரணமே
ஜனநாயகத்தின் சம்பளம்
என்றது.
“பஞ்ச தந்திர” உத்திகள்காட்டி
திரிபுரம் எரித்த சிவனையே எரித்ததுபோல்
திரிபுரா மார்க்சிசத்தை அகற்ற‌
பணம் எரிந்தது.
ஜனநாயக சிவனும் எரிந்தான்.
ஓட்டுப்பெட்டிக்குள்
உச்சிக்குடுமி வைத்த‌
மனுவின் “சாணக்கியம்” சதித்திட்டம் தீட்டி
திரிபுராவில் சிவனையே எரித்து விட்டது.
“உலகத்து பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்
நீங்கள் இழக்கப்போவது..
நீங்கள் இழந்து விட்டது எல்லாம்
அந்த அடிமைச்சங்கிலிகள் அல்ல‌
உங்களுக்கு வழி காட்டும்
அந்த “பொதுமை விளக்கே” தான்”

News

Read Previous

பெரியாறு அணை கட்டிய பெருமைமிகு பென்னிகுக் ………

Read Next

திரைப்பட ரசனை வகுப்பு & அழியாத கோலங்கள் திரையிடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *