தியாகம்

Vinkmag ad

தியாகம்

அணையுடைத்து வெள்ளம்

அழிவை எட்டும் முன் – தன்

கைவிரலால் அழிவைத்

தடுத்துநின்றான் சிறுவன்!

அரியதொரு கதையதனை

அறிந்தநாள் நினைவிலுண்டு

அதுதானே தியாகம்!

 

எல்லைகளில் காவல்நின்று

எல்லோரும் சுகமாய் உறங்க

தன் கடமை ஆற்றுகின்ற

இராணுவ வீரர்களின்

வாழ்க்கையே தியாகம்தானே!!

 

பிறர்வாழ தன்வாழ்வை

அர்ப்பணிக்கும் உள்ளங்கள்..

கருணை இல்லம் முதல்

மருத்துவ மனைதோறும்

சேவை புரிந்திடும்

மாந்தரின் வாழ்வெல்லாம்

தியாகம்.. தியாகமே!!

News

Read Previous

மாசகற்றும் மாசிலா மனிதன்!

Read Next

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *