தித்திக்கும் தை மாதம்

Vinkmag ad
ஈரைந்து திங்களில் தமிழன்னை பெற்ற

தைமகளே வருக தனமள்ளித் தருக

மஞ்சள்நூல் பூலாவேம்பூ மாவிலைத் தோரணம்
வீடுவெள்ளை அடித்து   வரவேற்கும் காரணம்
பழையன கழித்து புதியன புகுத்து
அகக்குப்பைப் போக்கி அகமகிழ போகி
உலகத் தேருக்கு அச்சாணி உழவன்
வறுமையில் உழன்றாலும் உணவளிக்கும் இறைவன்
பரிதிக்கு பணிவுடன் பொங்கலும் கரும்பும்
பண்டங்களுடன் உறவுகளைக் காணமனதும் விரும்பும்
கிருமிநாசினி தெளித்து வண்ணமாக் கோலம்
விஞ்ஞானம் விளக்கும் தமிழன் கலாச்சாரம்
கரகாட்டம் ஒயிலாட்டமென கலை நிகழ்ச்சி
மயிலாட்டம் கும்மியென மனதிலே மகிழ்ச்சி
காளையருக்கு ரேக்ளா சல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு
கலப்பினமாட்டால் கலகம் செய்தால் அடித்துவிரட்டு
– அபிநயா,துபாய்.

News

Read Previous

விருப்பமுடன் செயற்படுவோம் !

Read Next

தமிழரின் சாதனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *