திக்கு தெரியாத காட்டில் கமல்

Vinkmag ad

திக்கு தெரியாத காட்டில் கமல்

============================================ருத்ரா

இப்படித்தான்

விஜயகாந்த் ஒரு புலிவேட்டைக்குப் போகிறேன்

என்று

குறுமுயல்களைப் பிடித்தார்.

தன்னந்தனியே பிடித்த‌

அந்த குறுமுயல்கள் கூட‌

அவர் வீரத்துக்கு சான்று தான்.

அப்புறம்

கூட்டணி ஆட்டத்துக்கு

துருப்பு சீட்டு வைத்துக்கொண்டு

என்னென்னவோ சினிமாக்கள் எல்லாம்

காட்டினார்.

எல்லோருக்கும் வரும்

முதலமைச்சர் ஆசைக் காய்ச்சல் வந்தபின்

அரசியலில்  வெறும்

நோயாளி ஆகி விட்டார்.

ஆனால் கமல் இப்போதே

ஒரு அரசியல் நோயாளி ஆகிவிட்டார்

\இல்லாவிட்டால்

திமுகவை இப்படி திட்டவேண்டியதில்லையே.

அறிவு பூர்வமாக பேசுவாரே.

சிக்மண்ட் ஃ பிராய்டு  கோட்பாட்டின் படி

இந்த “ஆழ்வார்ப்பேட்டை  ஆண்டவருக்குள்”

இன்னொரு “ஆளவந்தார்” குமுறுகின்றாரோ?

மக்களே

என்று இவர் கூப்பிட்டது போல்

மற்றவர்கள் கூப்பிட்டால்

“அய்யய்யோ..என்னைக்காப்பி அடித்து விட்டார்களே”

என்று கதறுவார் போலிருக்கிறதே!

சோழன் காலத்து பஞ்சாயத்து முறையை

காப்பி அடித்து

கிராம சபை என்று இவர் கூறிவிட்டாரே

அப்போ

அந்த சோழன்

அந்த நூற்றாண்டு தூரத்திலிருந்து

“அடே பரமக்குடி பொடிப்பயலே

காப்பி அடிக்கலாமா?”

என்று குரல் கொடுக்க மாட்டானா?

இவ்வளவு ஏன்?

மக்கள் நீதி மய்யம் என்று

இவர் தராசு பிடித்த நாளில்

“நாளை நமதே” என்று

எம் ஜி ஆரை காப்பி அடிக்கவில்லையா?

சரி தான்.

கமலுக்கு கமலே

அபூர்வ சகோதரர் ஆகி

அவர் காப்பி இவர்

இவர் காப்பி அவர்

என்று நடிக்க ஆரம்பித்து விட்டாரோ?

……….

……………

வடிவேலு சொன்னால்

இப்படித்தான் சொல்வார்.

அரசியலா இது!

சின்னப்புள்ளத் தனமாவுல்ல

இருக்கு…

News

Read Previous

சிரிப்போ சிரிப்பு

Read Next

காதலிப்பீர் மாந்தரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *