தாகூரின் கவிதை

Vinkmag ad

தாகூரின் கவிதை முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்தது

 

தனிமையில் நடந்து செல்

உன் அறைகூவலை யாருமே கேட்காத போதும்,

உறுதியுடன் தனிமையில் மேலே நடந்து செல்;

பயத்திலே சுவரைப் பார்த்து மற்றவர் குமைந்து நிற்கையில்

ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!

உன் மனம் திறந்து வெளியே

தனிமையில் நீயே பேசிக் கொள்;

வனாந்திர வெளியை நீ கடக்கும்

பொழுது, மற்றவர் உன்னைத்

தனியே விட்டுப் போனால்,

ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!

முட்களின் மீது ரத்தக்கறை படிந்த பாதையில்

உறுதியாக நடந்து செல்!

தனிமையில் நடந்து செல்!

புயல் சூழ்ந்த பயங்கர இரவில்

வழிகாட்டும் ஒளியை

மற்றவர் உணக்கு உயர்த்தத் துணியாத போது,

ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!

அடிக்கும் மின்னலிலும் மழையின்

அவதியிலும் உன் இதயத்தையே

நீ விளக்காக ஏற்றிக் கொள் –

நீயே உனக்கு வழிகாட்டும்

ஒளியாக விளங்கிக் கொள்!

– இரவீந்திரநாத் தாகூர்

 

 

இக்கவிதை முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்தவர் பெயர் தெரியவில்லை.

பழைய டைரியைப் புரட்டியபோது தென்பட்டது.  பகிர்கிறேன்.

சு. ஜெயராமன்
94885 27140

 

தாகூரின் கவிதையை, அவரே ஆங்கிலத்தில் செய்த மொழி பெயர்ப்பு இங்கே….
  IF they answer not to thy call walk alone,
If they are afraid and cower mutely facing
     the wall,
O thou of evil luck,
open thy mind and speak out alone.
If they turn away, and desert you when
     crossing the wilderness,
O thou of evil luck,
trample the thorns under thy tread,
and along the blood-lined track travel
     alone.
If they do not hold up the light
when the night is troubled with storm,
O thou of evil luck,
with the thunder flame of pain ignite
     thine own heart
and let it burn alone.
[Poems: a collection of one hundred and thirty poems, all but fifteen of which have been translated by the Poet himself. Edited by Krishna Kripalani, Amiya Chakrabarty and others.]
    –Rabindranath Tagore, Poems, Visva-Bharati, 1942

News

Read Previous

செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

Read Next

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

Leave a Reply

Your email address will not be published.