தந்திக்கு வந்தது தந்தி!

Vinkmag ad

விடுதலைக்கு முன்னரே

வித்திட்டு நின்றாய்;

விடுதலைப் பெற்று

விடைபெற்றுச் சென்றாய்

அறிவியலின் கண்டுபிடிப்பால்

அயராமல் உழைத்தாய்;

அறிவியலின் வளர்ச்சியால்

அயர்ந்து ஒழிந்தாய்!

நட்டக் கணக்கால்

நசுங்கியது வரவும்;

இட்டமில்லை அதனால்

இழந்தது உறவும்!

செல்லிடைப் பேசி

செய்திட்டப் புரட்சி

செல்லாக் காசாகிச்

சீண்டியது வறட்சி!

வாகனம் இல்லாத

வறிய கிராமம்

சோபனம் எட்டும்

செய்தி “டெலிகிராம்”

விழாக்களில் எல்லாம்

விரைந்திடும் தந்தியே

விழாவுக்கு வாழ்த்தை

வழங்கிடும் முந்தியே!

நலம் கேட்டு

நாட்டில் விரைந்தாய்

பலம் இன்றி

பாரதத்தில் மறைந்தாய்!

இறுதிச் சடங்குகளை

இந்தியாவில் அறிவித்தாய்

இறுதிச் சடங்கையே

இன்றுனக்கு அறிவித்தனர்!

–அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

மனிதம்

Read Next

பாங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *