சுனாமி

Vinkmag ad
tsunami
என் மனம் கனத்திருந்தால்
உன் மடி தேடி வருவேன்
அமைதியாய் ஆர்ப்பரிக்கும்
அலை தொட்டு வரும்
ஈரக்காற்று – என்
இடர் தீர்க்குமென்று!
உன் நீலக்கூந்தல்
வாசம் கொள்ள – நீளுமொரு
கூட்டம் அங்கே கண்டிருக்கிறேன்
அந்தோ…..
ஓலங்கள் ………மரண ஓலங்கள்
உன்னை சபித்துக்கொண்டிரும்
மனித உள்ளங்கள்
புரியாத பெயர் சொல்லி -விளையாடும்
உன் விளையாட்டின் விலை  – ஒன்றுமறியா
அப்பாவிகளின் உயிரோ?
அசுரமாய் ஆர்ப்பரித்த  அலையால் –
உன் கொடூர வலையால் –
உன் மடியெங்கும்
எங்கள் மனித உயிர்கள்
என் மனம் கனத்திருக்கிறது……….…….!
புதுசுரபி 

News

Read Previous

திருக்குறள்

Read Next

வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *