சீர்வரிசை

Vinkmag ad
“சீர்வரிசை”
===============================================ருத்ரா இ  பரமசிவன்
ஏழு கட்டங்களாக
பரமபதம் ஆட்டம் விளையாடி
முடித்துவிட்டார்கள்.
நிதிஷ் குமார்
இப்போது  தான் வாய் திறந்திருக்கிறார்
எதற்கு இந்த
பலவேசங்கள் என்று?
இது சூப்பர் கம்பியூட்டர்களின் யுகம்
ஒரே கிளிக்கில்
இந்த நாட்டின் ஜனநாயக நாடியை
பிடித்துப்பார்த்திருக்கலாமே.
நாம் விண்வெளியில் அற்புத சாதனைகள்
எல்லாம்
நிகழ்த்துக்கிறோம்
சந்திரன் செவ்வாய் புதன்  சனி யென்று
நம் ஜாகக்கட்டங்களையெல்லாம்
விண்வெளியில் காட்டி
உலகையே வியக்க வைத்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படியிருக்க
இந்த தேர்தல் கணிப்பொறியை மட்டும்
மாட்டுவண்டியிலா வைத்து
ஊர்வலம் போவது?
நம் நாட்டு அறிவுஜீவிகளுக்கு
இது புரியாத புதிராக அல்லவா இருக்கிறது.
 கருத்துக்கணிப்புகள் என்று
இந்த ஊடங்கள் கூட
பல்லாங்குழி விளையாடி விளையாடி
வியாபாரம்
கல்லாக்கட்டிக்கொண்டது.
தெற்கு முனையிலே ஒரு கருத்து
வடக்கே பூராவும் ஒரு கருத்து
இந்த எதிர் அலை
எதிர் அலைக்கு எதிராக ஒரு அலை என்று
நம்
சமுதாய சித்தாந்த சொப்பனங்கள் கூட
எதோ ஒரு
ஜோடிக்கப்பட்ட அலைக்கூட்டங்களின்
கிராபிக்ஸாகக்கூட இருக்குமோ.
வடக்கே ஒரு அலை தெற்கே ஒரு அலை
என்ற
ஒரு புதிய விஞ்ஞானம்
அரங்கேற்றப்படும்
செயற்கையான ஒரு சகுனியாட்டம்
பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ?
வடக்கு ஓட்டத்திற்கு எதிரான ஒரு தெற்கு ஓட்டம்
முந்தய கால கட்டங்களிலும்
 நிகழ்ந்திருக்கிறது
என்ற
ஒரு தந்திர யதார்த்தம் இதனுள்
செருகப்பட்டிருக்குமோ?
கருத்துக்கணிப்பை ஒரு கல்வெட்டு போல
பதித்துவிட்டால்
திரைமறைவு புராண சதியாட்டங்களை
அப்படியே
பிலிம் காட்டி  விடலாம்.
அல்லது
இதற்கு உல்டாவாகக்கூட நடக்கலாம்.
சூட்சுமம் தெரியாத மக்கள் நம் மக்கள்.
முணுக்கென்றால்
வரிசையில் வரிசையில்…வரிசையில்
நின்று கொண்டே இருப்பார்கள்
கை உயர்த்திச்சிரித்துக்கொண்டு.
தூக்கத்தில் நடக்கிற வியாதி போல்
“வரிசையில் நின்று கொண்டே இருக்கிற” வியாதி
நம் ஜனநாயத்துக்கு!
நம் தமிழ் மக்களோ மெத்தப்படித்த மேதாவிகள்.
“வர்ர லட்சுமியை வேண்டாம்னு சொல்லலாமா?”
என்று வரிசைகளிலேயே நின்று
அந்த “சீர்வரிசைக்கு”கும்பிடு போடுவார்கள்.
நாளை நடப்பதை யார் அறிவார்.
“நாராயண ,,நாராயண ..நாராயண”
நாரதர்  துந்தனாவின்
ரீங்காரங்களின்
காது குடைச்சல்கள் தாங்க முடியவில்லை.

News

Read Previous

இஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்

Read Next

டெல்லி கருத்துக்கணிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *