சின்னப் பூக்களே ….

Vinkmag ad

இசை: ஏ.ஆர்.ரைஹானா
பாடல்: பேராசிரியர் ஹாஜாகனி
———————————
சின்னப் பூக்களே
சேர்ந்து நில்லுங்கள்

பூமிஎங்கும் தமிழ்மணத்தைக்
கொண்டு செல்லுங்கள்

தாய்மொழித்தமிழ்
தேனைப் போன்றது
வையம் தோன்றும் முன்பிருந்த
வானைப் போன்றது

தமிழில் பேசுவோம்
தமிழைப் பேசுவோம்
தரணி எங்கும் அறிவின் தென்றல் ஆக வீசுவோம்..

அகரம் சொல்லுவோம்
சிகரம் செல்லுவோம்
அகர முதலத் தமிழ் படித்து
அகிலம் வெல்லுவோம்

மொழிகளுக்கெல்லாம் மூத்த தாய்மொழி
ஒளிமிகுந்த உள்ளம் செய்யும்
நமது தமிழ் மொழி

தமிழைப் பாடுவோம்
தமிழர் கூடுவோம்..

அகிலமுள்ள துறையனைத்தும்
வென்று காட்டுவோம்…

சங்கம் கண்டதாம்
சந்தனத் தமிழ்
அங்கும் இங்கும்
எங்கும் பொங்கும்
அன்புதான் தமிழ்

ஆதி நாளிலே
நீதி சொன்னது

சோதி தந்து
உள்ளம் தன்னை
சுடர வைத்தது

பற்று கொள்ளுவோம்
கற்று கொள்ளுவோம்

எட்டுத்திக்கும் சுற்றி என்றும்
வெற்றிகொள்ளுவோம்

குயில் எழுப்புதே
துயில் பறக்குதே
அமெரிக்காவின் நகரமெங்கும்
தமிழ்மணக்குதே

ஏசிடி என
சிசிடி என
பாடத்திட்டத்துக்குள் தமிழும்
சிறகடிக்குதே
அழகு பூந்தமிழ் அகிலம் வெல்லுதே

நியுயார்க் டல்லாஸ் டெக்சாஸ்
எங்கள் தமிழைச் சொல்லுதே..

News

Read Previous

உங்கள் குழந்தைகளின் நலன் உங்கள் கையில்…..

Read Next

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *