சமதர்மம்

Vinkmag ad

சமதர்மம்
என்று மேடை
போட்டுக் கூறுகின்றான்
வீட்டினிலே அடக்கியாளுகிறான்
தன் மனைவியை ஏன் சமதர்மம்
மனைவிக்கு இல்லையா_?

அனைவருக்கும் சம
உரிமை என்று கூறுகின்றான்
ஆரம்பப் பள்ளியிலே கீழ் சாதி
மேல் சாதி என்று பாடம் புகட்டுகின்றான்
ஏன் கீழ் சாதி மனிதன் இல்லையா_?

இனம் பிரிக்கிறான் மதம் பிரிக்கிறான்
பசி வந்தால் உண்ணும் உணவின்
தரம் பிரிக்க மனம் மறுக்கிறான்
அப்போது எங்கே போனது சாதி வெறி_?

படி ஏறி வருகின்றான் கால்பணிந்து
ஓட்டுக் கேட்கிறான் சம உரிமை என்று
வாக்குக்கொடுக்கிறான் எடுக்கிறான்
பதவி கொடுத்த வாக்கு எங்கே போனது_?

சம உரிமை திட்டம் அனைத்து
மக்களும் என் நாட்டு மக்களே
என்று பொய் உரைக்கிறான் இன
மொழி பார்த்து வழி விடுகின்றான்
ஏன் இந்த நாடகம்_?

சட்டம் பொது உடமை என்று கூறுகின்றான்
தனக்குச் சாதகமாக்கி சமத்துவத்தைக் குழி
போட்டு மூடுகின்றான் இதுதான் அரசியலோ_?

மக்களை இரும்புக் கூண்டில் எறும்பாக அடைக்கிறான்
இருதயம் இல்லா சிலரை காவலுக்குப் போடுகின்றான்
அரசுக்கு சமத்துவம் வெறும் வாய்ப்பேச்சு சாக்கடையில்
வாழும் ஈ போல் போச்சு இதுவும் நீதியா_?

அன்புக்கு தடை போட்டு இதயத்துக்கு பூட்டு
போட்டு ஆசைகளை அளவில்லாமல் சுமந்து
வந்தமருகின்றான் ஆட்சியில் அங்கே
வருமோ சமதர்மம்_?

இலை மறை காயாக சில விசக்கிருமி
கூடவே இருந்து கொள்ளுது வளர் செடியை
இன்னுமா நம்பிக்கை கொள்வது வரும் சமதர்மம்
என்று மக்களே_?

கவிக்குயில் ஆர் எஸ் கலா

இலங்கை

News

Read Previous

பெங்களூர் தமிழ் சங்கத்தில் நவ., 1 முதல் யோகா

Read Next

நகைச்சுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *