குயிலே மயிலே

Vinkmag ad

ஆ= சின்னக் கரும்பே செங்கரும்பே
தங்கக் கட்டியே தேன் பெட்டியே
வாராயோ மயிலே_அடி வாராயோ
மயிலே.

பெ=வானத்தில் பறந்தாலும்
கூட்டின் உள்ளே வளர்ந்தாலும்
குருவிக்கும் ஒரு ஜோடி வேண்டும்
அவை குளிரினிலே சூடு தேட வேண்டும்
கூவாயோ குயிலே அட _கூவாயோ ஆண்
குயிலே.

ஆ=தரை தொடும் அளவு தாவணி போட்டாலும்
காத்துக்கு நீ தடை போட இயலாதடி_அது
தடை இன்றி உள்ளே சென்று தடவுமே உன்னையடி
மயிலே அடி மயிலே.

பெ= அருவியிலே நீர் ஓட்டம்
உன் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம்
உள்ளத்தில் ஏன் கொண்டாட்டம் இளமை
விளையாட்டை விட்டு விடுங்க உங்கள்
சரஸத்தையும் நிறுத்திடுங்க
சமரசமாய் வாங்க குயிலே _அட ஆண்
குயிலே.

ஆ=அடியே மயிலே பைத்தியம் தீராமல்
வைத்தியம் முடியாதடி நீயாக வாயேன்டி
என் நாடியும் அதிகம் துடிக்குதடி இதயமும்
பலமாக அடிக்குதடி மயிலே.அடியே மயிலே

ஆ=பெ=
வம்பு விவகாரம் வேண்டாம் இனிமேல்
இன்றோடு நாம் ஒருவர் ஒன்றாக
இணைவோம் உறவில். குயிலே அட
ஆண் குயிலே=மயிலே அடி மயிலே

ஆர் எஸ் கலா

இலங்கை

  

IMG_43896489793318.jpeg
128 KB

News

Read Previous

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் குறிப்புகள்!!!

Read Next

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *