குப்பைக்குள் குப்பையாய் …

Vinkmag ad

குப்பைக்குள் குப்பையாய் …

-ஆவூர் கைஸ்ரே ஜஹான்

குப்பையாக்கப்பட்டு

நிரம்பிய தேசத்தில்

குவியலுக்குள் நாம் !

 

ஆலைகளின் கழிவுகளில்

அசிங்கமாகிப் போன

ஆறுகளுடன் நாமும் !

 

அரசியல் அதிகாரத்தில்

ஏழை வயிற்றுப் பணம்

கோடிகளாக சுவிஸில் !

 

கொஞ்சி விளையாடும்

பிஞ்சுகளைக்கூட விட்டு

வைக்காக் காமக்கயவர்கள் !

 

தேசப் பிதா – கொன்றவனைத்

தியாகியாக்கும் தீவிரவாதம்

உருக்குலைகிறது தேசம் !

 

குப்பை அள்ளுவதாய்

போஸ் கொடுப்பதாலே

தூய்மையாகிடுமா நாடு?

 

எதை அகற்றுவது

தெருவில் கிடப்பதையா?

தேசத்தில் அலைவதையா?

 

வினாக்கள் பெருக

விடை தேடி நாமும்

குப்பைக்குள் குப்பையாய் !

 

 

( இனிய திசைகள் – ஜனவரி 2015 இதழிலிருந்து )

News

Read Previous

திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோயில் இடத்தைப் பாதுகாக்க கோரிக்கை

Read Next

அழுக்ககற்ற முனைந்துநிற்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *