கவியரசர் கண்ணதாசன் எழுதிய டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்

Vinkmag ad

21.04.2019 ஞாயிற்றுக்கிழமை

👉இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்-1964.

👉டி.ஆர்.மகாலிங்கம் நினைவு நாள்-1978.

டி. ஆர். மகாலிங்கம், 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்படநடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.

உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

மதுரை மாவட்டம்,  சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார்.
〰〰〰🎙🎙🎙〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதிய டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல் ஒன்று.

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ – வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?

பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ – அன்னை
தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை

படம் : திருவிளையாடல்
〰〰〰🎼🎼🎼〰〰〰
📜கவியரசர் பொன்மொழி

பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில்
பார்ப்பவர்கள்,

நடிகையை நினைத்து கொண்டு
மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்
〰〰〰〰〰〰〰〰〰
🙏🏻கண்ணன்சேகர்,
9894976159.

News

Read Previous

சென்னையில் கூட்டு திருமண நிகழ்ச்சி

Read Next

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *