கவியரங்கம்

Vinkmag ad
கவியரங்கம்
 
சந்தையில இந்தவாரமும்
பவுடர் வாங்கிவரலை!
சந்தைக்குப் போன அப்பன்
சந்தையில இந்தவாரமும்
பவுடர் வாங்கிவரலை!!
வாக்கப்பட வேளை வருகுதில்லை
தூக்கப்போடு விழும் வாக்கரிசி
போய்ச்சேர்ந்தாள் நீலாமணி!
தூக்கப்போடு விழும் வாக்கரிசி
போய்ச்சேர்ந்தாள் நீலாமணி!!
 
வாழ்த்துச் சொன்னான் துரை!
வாழ்த்துகள்டா மோகன்,
நிறமென்னவோ உன்னவிடக் கொறவுதான்
ஆனா ஆளென்னவோ கட்டழகு!
இல்லாதவன் மனசுலயும் உண்டாச்சு கருக்கு!
இல்லாதவன் மனசுலயும் உண்டாச்சு கருக்கு!!
 
போனவர்களிடம் சொல்லியனுப்பினாள் தாய்க்காரி
போனவர்களிடம் சொல்லியனுப்பினாள் தாய்க்காரி
மொகம்பார்த்து சோடனைபார்த்து
சிரிப்புபார்த்து கவனிப்புபார்த்து
அங்க இங்க செதறவுட்றாதீங்க‌
அங்க இங்க செதறவுட்றாதீங்க‌
காதோரம் கழுத்தோரம்
தெரிஞ்சி போகும் அசல்!
தெரிஞ்சி போகும் அசல்!!
 
ஆப்பீசர் பெரியபடிப்பு படிச்சவரு
வெள்ளயும் சொள்ளையுமா
கேட்ட தொகையக் குடுத்தம்னா
செசு தருவாரு ஏற்பாடு
செசு தருவாரு ஏற்பாடு
எடுத்தாடி மேரீ
அந்த ரெட்டவடச் செயினு!
எடுத்தாடி மேரீ
அந்த ரெட்டவடச் செயினு!!
படகு வாங்க‌
அடகு வைக்கக் கிளம்பினான் டேவிட்!
 
சங்கவிழா தமிழ்ச்சங்கவிழா
நெறியாள்கை தொகுப்புப்பேச்சு
பார்ப்போரெல்லாம் வாய்பிளந்திருக்க‌
வழங்கவேணும் நெறியாள்கை தொகுப்புப்பேச்சு
அவங்கதமிழ் கலோக்கியல்
அவங்கதமிழ் ராவா இருக்கும்
ஆங் அவங்க குட்லுக்கிங்
ஆங் அவங்க குட்லுக்கிங்
பேச்சும் நதியாப் போல‌
பேச்சும் நதியாப் போல‌
நாங்க ஒன்றும்
மேனிக்கலர் குறித்துப் பேசலையே?
பேசலையே
நாங்க ஒன்றும்
மேனிக்கலர் குறித்துப் பேசலையே?!
இவங்களையே செலக்ட் பண்ணிடலாம்
அவங்க வேண்ணா எழுதிக்கொடுத்து
அவங்க வேண்ணா எழுதிக்கொடுத்து
எல்ப் பண்ணட்டும்! எல்ப் பண்ணட்டும்!!
 
கவியரங்கம்
தலைப்பு என்ன வைக்கலாம்?
ஆய்வுக்கூட்டம் நடத்திடலாம்!
ஏகமனதாய்த் தீர்மானம்!
தலைப்பு யாதெனில்
நிறவெறி களைவோம்!
மனிதநேயம் காப்போம்!!
தலைப்பு யாதெனில்
நிறவெறி களைவோம்!
மனிதநேயம் காப்போம்!!
 
‍-பழமைபேசி.

News

Read Previous

காதல் எனும் கோரோனா

Read Next

மணி அடிக்கும் முன்னே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *