கவிதை எழுத ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

Vinkmag ad

அன்பிற்கினியவர்களே..

வணக்கம்.    தமிழ்த்தேரின் அடுத்த அத்தியாயம்..  புரட்சியின் பூபாளம்… மே மாத இதழ் துபாயில் வருகிற 15.05.2015 அன்று வெளியிடப்பட உள்ளது.    இந்த மாதத்தை உழைக்கின்ற வர்க்கத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக்கு அர்ப்பணம் செய்கின்ற விதத்தில் அவர்தம் சிறப்புகள் பற்றிய பதிவுகளையும் ஒரு சேர வரவேற்கிறோம்.

கடந்த மாத புத்தகங்கள் நிச்சயமாக உங்களை இன்னும் ஒரு சில நாட்களில் வந்தடையும் என்பதை தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில் .. இந்த மாத படைப்புகளை..

  1.  புரட்சியின் பூபாளம்    மற்றும்
  1.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றிய உங்கள் பதிவுகள்…

இவ்விரண்டையும் உடனடியாக வருகின்ற 12.05.2015க்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

உங்கள் படைப்புகள் அனுப்ப வேண்டிய  புதிய  மின்னஞ்சல் முகவரி:

tamilther.dubai@gmail.com

உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் பெரிதும் வேண்டி…

அன்புடன்..

காவிரிமைந்தன்…  ஜியாவுதீன் …

கவிதையும் படைப்பும் ஏற்கனவே அனுப்பியவர்களுக்கு இந்த மின்னஞ்சல் பொருந்தாது.

புரட்சியின் பூபாளம்

எத்தனையோ எடையுள்ள உருளைப்பந்தை

சின்னஞ்சிறு நெம்புகோல் புரட்டிவிடுகிறது!

அடிமைத்தள விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த

அலைகள்தான் புரட்சிகீதம் முழங்குகிறது!!

 

புரட்சி என்கிற வார்த்தைக்குள்ளே

பூகம்ப அதிர்வுகள் பொதிந்திருக்கின்றன!

கொடுமை விரித்தாடும் இடங்களெல்லாம்

பொங்கும் உணர்வுகள் புரட்சியாகும்!

வல்லதோர் நாடாக வளர்வதற்கும்

பல்வேறு புரட்சிகள் தேவையிங்கே!

கல்விமுதலாய் புரட்சி கண்டே

கற்றறிவாளர் பெருகக் கண்டோம்!

பசுமைப் புரட்சி ஒன்றிணைத்தான்

பசியை விரட்டப் பழகிக் கொண்டோம்!

வெண்மைப் புரட்சி விளைந்ததனால்

பாலும் வகையும் நிரம்பக் கண்டோம்!

போட்டி மிகுந்த சமுதாயத்தில்

தொழில் புரட்சி அவசியம் நாமுணர்ந்தோம்!

போரும் பகையும் வீழ்த்தியிங்கே

அமைதிப் புரட்சிப் பண்பாடுவோம்!

 

நமது அடுத்தத் தலைப்பு  புரட்சியின் பூபாளம்!

இது தவிர, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பொன்மொழிகள் வரவேற்கப்படுகின்றன.  சிறந்த பொன்மொழி தருவோருக்கு பரிசும் சான்றிதழும் வானலை வளர்தமிழ் – தமிழ்த்தேர் சார்பில் வழங்கப்படும். 

+

பட்டுக்கோட்டையார் பாடல்கள்..

பாட்டாளி மக்களின் வர்க்கப் பிரதிநிதி

பாட்டாலே வையத்தை பாலிக்க வந்த மகன்!

பகுத்தறிவு எனும்பாலை வற்றாமல் சுரந்தவன்!

எப்போதும் ஈடு இல்லா எங்கள் தமிழ்மகன்!!

 

புரட்சிக்கு வித்தாகும் புதுமைகருத்துக்களை

இசைப்புரவியோடு படையெடுத்து வந்தானே

கனிந்துருகும் காதலிலும் கற்பனை கலந்தெழுதி

காலத்தை வென்றுநிற்கும் பாடல்கள் பல தந்தானே!!

 

பட்டுக்கோட்டைக்கருகிலே இவன் பிறந்தான்

பாட்டுக் கோட்டையாய் என்றும் திகழ்ந்தான்

பாடுபடும் தொழிலாளர்களின் தோழன்! – இவன்

பாட்டொன்றுபோதும் அதிகாரம் ஆடும்!!

 

பொதுவுடைமைக் கொள்கைகளை பதியமிட்டு

இவனெழுதிய பாடல்களுக்கு ஈடு இல்லை!

பொங்கிவரும் தமிழெடுத்து இவன் புகழை

புரட்சியிலே பூபாளத்தோடு இணைத்துக்காட்டுவோம்!

 

பட்டுக்கோட்டையார் பாடல்கள் பற்றிய

சிறப்புப் பதிவு ஒன்றை உங்கள் மனதிலிருந்து

பிறப்பெடுத்துத் தாருங்கள்! தமிழ்த்தேரில்

தடம் பதிக்கட்டும் உங்கள் முத்திரைகள்!

உங்கள் படைப்புகள் அனுப்ப வேண்டிய  புதிய  மின்னஞ்சல் முகவரி:

tamilther.dubai@gmail.com

முதல் கவிதை மற்றும் மறக்க முடியவில்லை ஆகிய இதழ்கள் விரைவில் உங்களுக்கு PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும்..

தவிர்க்க முடியாத சூழலால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

இது தவிர..   ஜூன் மாத தலைப்பு  காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்  என்பதை முன்னிட்டு…

உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது முதல் வரிசையில் உங்கள் மனதில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று பாடல்களை நீங்கள் பட்டியலிட்டு அனுப்பினால்..

அதிலிருந்து ஒன்றையே உங்கள் கவிதைத் தலைப்பாக்கிட விழைகிறோம்.  (உங்கள் விருப்பம் எதுவோ அதுவே நீங்கள் எழுதிடப் போகும் தலைப்பாகும்)

 

கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்

பம்மல்,  சென்னை 600 075

தற்போது – அபுதாபி – அமீரகம்

00971 50 2519693

00971 50 4497052

kaviri2015@gmail.com

www.thamizhnadhi.com

News

Read Previous

தேவகோட்டை ராமநாதனின் பட்டிமன்றம்

Read Next

வஃபாத்துச் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *