கனவே கலையாதே….

Vinkmag ad
 
—–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!!
நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்;
நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்;
மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்;
மதங்களைப்போற்றி மாற்றாரை மதிக்கும் மானிடரைக்கண்டேன்;
மரங்களும் மனங்களும் மனிதர்க்கு நிழல் தரக்கண்டேன்;
ஈரம் காயாத இதயங்கள் கண்டேன்;
ஈகை பேணிடும் இமயங்கள் கண்டேன்;
பணத்தையே பைத்தியமாக்கும் ஊழல் ஒளிந்ததை கண்டேன்;
பிணத்தையும் பெண்ணாய்ப்பார்க்கும் பித்தர்கள் ஓய்ந்ததை கண்டேன்;
பார்வைகளை பரித்துப்போன பிரதேச கலாச்சாரங்கள் அழிய கண்டேன்;
வங்கிகளின் வாயுள்ள கால்நடைகளாய் இருந்த வர்கமொன்று,
விடுதலையானதைக் கண்டேன்;
வணிகமில்லா வகுப்பறிவும் பகுத்தறிவும் பரவிடக் கண்டேன்;
வயிற்றிற்க்கும் வாயிற்க்கும் போராடியவர் வயிராறுவதைக் கண்டேன்;
சாலையோர திருவோடுகளெல்லாம் சரித்திரம் படைக்கும் கேடையங்களாக கண்டேன்;
சட்டமும் ஒழுங்கும் சமரசம் செய்யக் கண்டேன்;
நீதித் தாயின் கண்கள் அவிழ்ந் திருப்பதை கண்டேன்;
நதிபோல் நீதியும் தூய்மையுறக் கண்டேன்;
குடங்களெல்லாம் குப்பையில் மிதக்கக்  கண்டேன்;
குழாய்களில் குடிநீர் தித்திக்கக் கண்டேன்;
கிழிசல்களைத் தைக்கும் ஊசியாய் இளைஞர்களைக் கண்டேன்;
சோம்பலும் சுயநலமும் சோர்வடையக் கண்டேன்;
முகவரி இல்லா முதியோர் இல்லம் கண்டேன்;
முற்றத்தில் ஆறும் ஆறுபதும் ஆடிப் பாடக் கண்டேன்;
பீடிகளும், பட்டாசுகளும் பிஞ்சுவிரல்களை வெறுக்கக் கண்டேன்;
கொலைக்கும் கொள்ளைக்கும் என் குழந்தைகள் அர்த்தம் கேட்க கண்டேன்;
புழங்கக்கூடாத புனர்தலை புறக்கணிக்கும் ஆண் பெண்  கண்டேன்;
மெய்களெல்லாம் மெருகேற கண்டேன்;
பொய்களெல்லாம் புரண்டோடக் கண்டேன்;
அரண்கள் அனைத்தும் அரேங்கேறக் கண்டேன்;
அநியாயங்கள் அழிந்தொழிந்ததைக் கண்டேன்;
விதைகளெல்லாம் கனிகலாகக் கண்டேன்;
மானுடமெல்லாம் மாறிய மண்ணில்;
பிறக்கும்  குழந்தை சிரிக்கக் கண்டேன்…;.
கண்டதெல்லாம் கனவோ என்ற ஐயம் ஏழவே,
கண்விழித்தேன் தூக்கத்திலிருந்து…
Regards,
இஸ்லாமிய சகோதரி
mmabu@yahoo.com
 

News

Read Previous

பாங்கு

Read Next

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *