ஒருமைப்பாட்டின் ஒலி

Vinkmag ad

ஒருமைப்பாட்டின் ஒலி

திருமலர் மீரான்

 

குத்புல் அக்தாபு

கெளதுல் இஸ்லாம்

ஷாஹுல் ஹமீது

நாகூர் மீரான்

வலியவர்கள் !

 

கல்வத் தென்னும்

கலா சாலையில்

ஞானக் கல்வியை

இறைவனின்

அழகிலும்

மொழியிலும்

உவப்பிலும் கற்றதால்

‘குத்பு’ என்னும்

பட்டம் பெற்றவர் !

 

மீரான் சாகிபின்

மிக்குயர் வாழ்வின்

மேலான ஏடுகள்

சரித்திரத் தாயின்

நெஞ்சில் பதித்த

காலடிச் சுவடுகள் !

முற்றிய தீனின்

ஞானக் கல்வெட்டுகள் !

சத்ய வாழ்வின்

நித்ய நிழல்கள் !!

 

வட இந்தியாவில்

கருவாகி

நானிலம் முழுவதும்

ஒளியாகி

தென் னிந்தியாவில்

நிலையான

ஷாஹே மீரான்

ஆண்டவர்கள்

தேச மெங்கும்

வலியவர்கள் !

ஒருமைப்பாட்டின்

ஒலியவர்கள் !!

 

வலியவர்களின்

பாத யாத்திரையில்

பாழும் நிலங்களும்

கருவுயிர்த்தன !

 

அறுந்து கிடந்த

மனித வீணையின்

நரம்புகள் கூட

அவர்கள் மூச்சுப்பட்டு

மீட்சி பெற்றன !

ஆத்மாவின்

தீன் ராகங்களை

இசைக்கத்

தொடங்கின !!

 

ஷிர்க்கின்

முகாரியில்

அழுது கொண்டிருந்த

ஆதாமின் பிள்ளைகள்

அவர்களின்

தெளஹீதுத் தாலாட்டால்

அமைதியாய்த்

தூங்கத் தொடங்கின !

 

வலியவர்களின்

திக்கு விஜயத்தால்

திக்கற்றவர்களும்

கஃபாவின்

திக்கினைத் தெளிந்தனர் !

தீந்தேனை

அருந்தினர் !

 

அன்று

அவர்கள்

பாடிச் சென்ற

பள்ளி யெழுச்சியால்

இன்று

தென் னிந்தியாவின்

தெருவுகள் தோறும்

பள்ளிவாசல்கள்

நிமிர்ந்து நிற்கின்றன !

 

நன்றி :

மதி நா

மே 1980

News

Read Previous

தீபஒளித் திருநாள்

Read Next

மௌனக் காற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *