ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Vinkmag ad

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
—————————————

ஈமானில் ஒன்றிணைந்தோம்
இஸ்லாத்தில் ஒன்றிணைந்தோம்
தொழுகையில் ஒன்றிணைந்தோம்
தோழமை உணர்வு கொண்டோம்

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
வெளிநாடுகளில் வாழ்ந்தோம்
இருந்தாலும் ஒன்றிணைந்தோம்

ரஸூலின் வழிநடப்போம் என்றோம்
ரஸூல் சொன்னதை ஏன் மறந்தோம்
ரஸூல் மட்டும் இல்லை என்றால்
ரஸூல் சொன்ன வெற்றி எங்ஙனம்

பீலிபை சாக்காடு நாம் அறிவோம்
பிடித்த கரம் தளர்ந்து விட்டால்
அச்சிறும் அப்பண்டம் போல்
அடிநாதம் இழந்து அழிவோம்

மாட்டு மந்தை ஒன்றிணைந்து
மாய்க்க வந்த சிங்கம் தனை
விரட்டியது ஒன்றிணைந்து அது
வீழ்ந்தது ஒற்றுமை இழந்து

வலையில் சிக்குண்ட பறவைகள்பல
வானமதில் ஒன்றிணைந்து பறந்து
வேடனின் சதியை முறியடித்த கதை
வேண்டுமென்றே நாம் மறந்தோம்

ஒற்றுமை எனும் கயிற்றை பிடித்து
ஒன்றுபட்டு நிற்க வில்லை எனில்
வெற்றி கிடைப்பது என்பது அரிது
வீழ்வது என்பது மட்டும் உறுதி

பள்ளியில் படித்து உணர்ந்தது
பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்தது
பட்டங்கள் பல பெற்றும் இன்றும்
பாடம் கற்கவில்லை என் செய்வது

பதர் போரில் சஹாபா சிறுகூட்டம்
பதராய் சிதறடித்த பெருங் கூட்டம்
வரலாற்றை நாம் அறிவோம் ஆனால்
வாழ்வில் அதை கொணர மறுப்போம்

உஹதுப் போரில் இறுமாந்து உத்தம நபியின் கட்டளை மறந்து
இழந்தது ஹம்ஸா என்ற சிங்கமும்
இருந்த பலசஹாபா சிறுத்தைகளும்

இதையெல்லாம் மறந்து வாழ்ந்தால்
இனி எங்கே நமக்கு எதிர்காலம்
கட்சிசாரா மக்கள் நாங்கள் பலர்
கடமை உணர்வோடு நிற்கின்றோம்

கட்சி என்று சொல்லி சிலரை
கட்டுபாட்டில் வைத்திருக்கிறீர்கள்
தார்மீக பொறுப்பை உணர்ந்து
தலமைக்கு பெருமை சேர்த்திடுங்கள்

எங்களுக்காக நீங்கள் என்றால்
உங்கள் பின் நாங்கள் நிற்போம்
இல்லையென்று ஆகிவிட்டால்
இனி எங்கள் நிலை வேறாகிவிடும்

இணைய மாட்டோம் என்று நீங்கள்
இனியும் அடம்பிடித்தால் நாங்கள்
எதிரியின் கைபொம்மையாய் மாறி
எதிர்காலம் இன்றி தவிப்போம்

உறவாய் ஒன்றிணைந்து
உணர்ந்து செயல் பட்டால்
உலகை வெல்வோம்
உவகை கொள்வோம்

மு. முகமது யூசுப். உடன்குடி

News

Read Previous

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?

Read Next

கவிஞர் இரா. இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *