எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?

Vinkmag ad
” எழுத்தெல்லாம்  தூய தமிழ்  எழுத்தாகுமா?”
பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே
அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை
கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே
இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ?
அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே
கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ?
புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி
வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை
பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில்
தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல
முழுத்தத்தில்  முடித்த மணமும் கொழுத்தோடி மணமுடித்து
ஒழுக்கத்தை  மீறிய  இழுக்கச்  செயலும்  ஒன்றாமோ ?
” எண்ணென்ப  ஏனை  எழுத்தென்ப  இவ்விரண்டும்
கண்ணென்ப  வாழும்  உயிர்க்கு ”  எனக்  கூறும்
கண்ணொத்த  நம்கனித்தமிழுக்கு கழலுகின்ற மொழிஎழுத் தெல்லாம்
முன்பிறந்த  மூத்தமொழியாம்  முத்தமிழ் எழுத்தாகுமா எனக்கூறி
மொழியழிந்தால் இனமழியும் விழியிழந்தால் மாந்தன் ஆகானென
வழியறிந்த  காரணத்தால்  விழிநீர் துடைக்கத்  தனி
வழிகண்ட விருதைக் கழிபெரும்  கல்விபடைத்த காமராசர்
விழிதிறந்து  ஊழியைப்  பார்த்தநாளில் (சூலை 15) வாழ்த்துவோம் !
                                                     அன்புடன்  இளையவன் -செயா
                                                                    ( மா. கந்தையா )

 

News

Read Previous

எம்மோடே வாழுகின்றார் !

Read Next

சிறுகதை : ஜமீலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *