எய்ட்ஸின் … வாக்குமூலம் !

Vinkmag ad

 

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229

 

என் பெயர் தெரியுமா..?

எய்ட்ஸ் !

ஒரு தாகத்தை வளர்த்து

ஆபத்தைக் கொடுப்பேன் !

பாவத்தில் நனைத்து

சோகத்தை வளர்ப்பேன் !

நேரத்தைத் தொலைத்து

வீரத்தைப் பறிப்பேன் !

வேகத்தைக் கொடுத்து – என்

யாகத்தை வளர்ப்பேன் !

 

காமத்தில் பிறந்து

ஜாமத்தில் தொடர்வேன் ! – உன்

காலத்தைப் பிடுங்கி – பெருங்

காயத்தைத் தருவேன் !

சபலத்தைக் கொடுத்து – மோகச்

சகதிக்குள் இழுப்பேன் ! – என்றும்

அவலத்தை வளர்த்து

ஆட்டியே … படைப்பேன் !

 

விஞ்ஞான உலகிற்கு

வில்லனும் நானே ! – உங்கள்

விதி கூட மாறும் ! – என்

படை யெடுப்பால் தானே !

News

Read Previous

அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’

Read Next

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *