ஊடக விபச்சாரம் !

Vinkmag ad

 


(பி.  எம்.கமால், கடையநல்லூர்)
 
 
 
உடலை விற்று 
வயிற்றை வளர்ப்பவள் 
விபச்சாரி !
பொய்யை விற்றுப் 
பையை  நிரப்புபவன் 
ஊடக முதலாளி !
 
குண்டுவெடிப்பில் 
முஸ்லிம் கைதானால் 
தலைப்புச் செய்தி 
அவனே 
குற்றமற்றவன் என்று 
விடுதலை ஆனால் 
பெட்டிச் செய்தியுமில்லை 
குட்டிச் செய்தியுமில்லை !
 
எல்லா ஊடகங்களும் 
எதிரிகள்தான் 
முஸ்லிம்களுக்கு !
அந்த 
ஊடகக் காகிதங்கள் 
காகிதங்கள் அல்ல !
அட்டைகள் 
முஸ்லிம்களின் 
பணக் குருதியை 
உறிஞ்சிடும்  அட்டைகள் !
 
ஊடகங்கள் காட்டுகின்ற 
கற்பழிந்த நாடகங்கள் 
ஓடுகாலிப் பெண்களை 
உருவாக்கும் பட்டறைகள் !
 
புத்தி தடுமாறிக் 
கத்தியைத் தூக்குகின்ற 
போக்கிரி பொல்லாத 
கொலைகாரன் கள்ளனுக்கும் 
பள்ளிக் கூடமே 
இந்தப் 
பயங்கர ஊடகங்கள்தான் !
 
 
 
துலுக்கனைத் துடைத்தெறிய 
வேண்டுமென்ற அவாவுடன் 
அவாளாத்து ஊடகங்கள் 
அலைந்துதிரி கின்றன !
 
மைநிரப்பும் பேனாவில் 
பொய் நிரப்பி எழுதி 
பைநிரப்பித் தங்களை 
பலப்படுத்து கின்றார்கள் !
 
முஸ்லிம்களை இவர்கள் 
முகர்ந்து பார்க்காவிட்டால் 
மூச்சடைத்து காற்றடைத்து 
மோட்சமடைய மாட்டார்கள் !
 
முஸ்லிமல்லாதவன் 
குண்டு வெடித்தாலும் 
கோயிலை இடித்தாலும் 
பட்டாசு வெடித்ததாய்
பரப்புரை செய்வார்கள் !
 
ஆனால் 
முஸ்லிம் ஒருவன் 
பொட்டுவெடி வெடித்தாலும் 
போட்டுவிடுவார்கள் 
தங்கக் கோபுரம் 
தரைமட்ட மானதென்று !
 
ஆயத்தச்  செய்தி 
அவர்களிடம் எப்போதும் 
அச்சுக் கோர்க்கப்பட்டு 
தலைப்புச் செய்திக்காய் 
தவமிருந்து கொண்டிருக்கும் !
 
இது 
ஊடகங்கள் நடத்தும் 
பிரச்சாரமல்ல –
விபச்சாரம் !
 pmkamal28@yahoo.com

News

Read Previous

உச்ச நீதிமன்ற தீர்ப்பும்,ஷரீஅத் நீதிமன்ற எதிர்காலமும்?..

Read Next

குவைத்தில் “பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்” புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *