உலக மருத்துவர் தினம்

Vinkmag ad
உலக மருத்துவர் தினம் – 1.7.2020 

மண்ணுயிர்  அனைத்தும் காக்கும்

இன்னரும் சேவை செய்யும்

மகத்துவம் வாய்ந்த உலக

மருத்துவர் தினமாம் இன்று .
தனித்துவச் சேவை செய்யும்

மருத்துவர் அனைவருக்கும் .
வாழ்த்துக்கள் தெரிவிப்போம் – நம்
வாழ்க்கையைக்  காப்பதற்கே .
நன்றியை உரைத்திடுவோம் -நாம்
நலம் வாழ உழைப்பவர்க்கே.
மானுடர், விலங்கினங்கள்,
பறவைகள், உயிரினங்கள்
நோயென வந்துவிட்டால்
தாயெனக் காப்பவர்கள் .
தொற்றுநோய், தொழு நோய் -இன்னும்
பற்றிடும் நோயெதுவெனினும்
சற்றும் தயக்கமின்றியவர்
உற்ற மருத்துவம் செய்வார்.
ஆற்றலோடும்  அக்கறையோடும்- பணி

ஆற்றிடும் மருத்துவரை

போற்றி , நன்றி நவில்தல்
ஏற்றதோர்  செயலேயாகும்.
உயிரையும் காப்பார் – உடல்

ஊனங்கள் தவிர்க்கச செய்வார்

வந்த  நோய்கண்டறிந்து- சிகிச்சை

தந்து குணமடையச் செய்வார்.
தன்னுயிர் பணயம் வைத்து
இன்னுயிர் காப்போர் தமக்கு
இந்நாள் மட்டுமின்றி
எந்நாளும் நன்றி சொல்வோம்.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

Read Next

தேசிய மருத்துவர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *