உன் மனசாட்சி

Vinkmag ad

உன் மனசாட்சி 

பொன் குலேந்திரன் (கனடா)

மதி கெட்டு உன் போக்கில் நடக்கும் மனிதா,

மனசாட்சி என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு  ?

நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும்

நிட்சயம்  உன் மனமே சாட்சி

உன் மனசாட்சியை உன்  சுயநலத்துக்கு

உன் பொய்ச் சாட்சியாக்காதே

‘நான் மனசாட்சி படி நடக்கிறேன்” என நீ சொன்னாலும்

பதவி வந்ததும் மனசாட்சி உன்னில் மறைந்து விடும்

நல்லது  செய்கிறேன் என்று சொல்லி

நம்பி தந்தவர் பணத்தை வைத்துப்  பெயர் வாங்கினவன்  நீ

முதியோருக்கு மறதி  அதிகம் எனக்கருதி

முதியோர்களைப் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே

முதியோர் இல்லங்கள் ஏன் பெருகி வருகிறது?

மனசாட்சி இல்லாதோர்  பெருகுவதால்.

முதியோர்கள் எல்லாம் தலையாட்டும் பொம்மைகள் அல்ல,

முதிர்ந்த.. படித்த அனுபவசாலிகளும்  அவர்களில் உண்டு

தேவைப் பட்ட நேரம் உன் பதவிக்குப் பாவித்து விட்டு,

தேவையில்லை எனத் துப்பி விட அவர்கள் சக்கை  அல்ல .

பதவி இன்று வரும் நாளை போகும்,.

 பதிவாகி உன்னைக் நித்தம் குடைவது நீ மீறிய உன் மனசாட்சி

உளறிக் கொட்டுவாய் சந்தரப்பத்துக்கு ஏற்றவாறு,

உணமையில் உன் மனசாட்சியின் அனுமதியோடா பேசுகிறாய் ?

எங்கு,  நீதி,  நியாயம், தர்மம் இருக்கிறதோ.

அங்கு குரல் எழுப்புவர்  மனசாட்சி உள்ளவர்கள்

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசவாதம்.

புலம் பெயர்ந்த நாட்டிலும் பிரதேசவாதமா  ?

சண்டித்தனம் காட்டுவது சொந்த ஊரில்

சகாக்களோடு சேர்ந்து வாழ்வது இந்த நாட்டில்

நாட்டின்   சட்டம் தெரியாதவனே

நசிந்து போவாய் நீ அதை மீறினால்.

முதியோரை துஷ்பிரயோகம் செய்தால்

முடிவு உன் வாழ்வு காவலில்.

உன் மனசாட்சிக்கு எதிராக நடவாதே,

உன் தலை விதியை நீயே வீணாகத்  தேடாதே

இதை வாசித்தாவது திருந்தப் பார்,

இல்லையேல் குப்பைக்குள் நீ போவது நிட்சயம்.

மதி உள்ளவர்கள்  சுயமாகச்  சிந்தித்தால்,

மக்களின் மனசாட்சி என்றும் வெல்லும்

News

Read Previous

சென்னையில் இயற்கை நல்வாழ்வியல் பயிற்சி

Read Next

அகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *