உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !

Vinkmag ad

 

‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி

 

உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் !

வல்லவனே அல்லாஹ் ! – உனை

வணங்கி நானும் போற்றுகிறேன்

உதவிடுவாய் அல்லாஹ் !

யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !

சுபுஹானல்லாஹ்

(உயர்)

சிலை வணக்கச் சீமையிலும்

தீன்பயிரை வளர்த்தாய் ! – அன்று

சீறிவந்த உமர் வாளை

செயலிழக்க வைத்தாய் !

மண் பிளந்தும் ‘ஜம் ஜம்’ மாம்

நீரூற்றைக் கொடுத்தாய் ! – இதை

மறக்குமோ எம் உள்ளமெல்லாம்

மாண்புகளே நிறைத்தாய் !

யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !

சுபுஹானல்லாஹ் !

(உயர்)

தெளர் குகையில் அன்று உந்தன்

சாகஸத்தை விதைத்தாய் ! – எங்கள்

‘தங்கநிழல்’ அங்கிருந்த

ரகசியத்தை மறைத்தாய் !

சீறிவந்த ஈட்டிகளைத்

திசைமாற வைத்தாய் ! – ஒரு

சிலந்தி வலை பின்ன வைத்தே … (எங்கள்)

ஜீவன்களைக் காத்தாய் !

யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !

சுபுஹானல்லாஹ் !

(உயர்)

வஹியாய் ஓர் வசந்தத்தை

வல்லவனே கொடுத்தாய் ! – உயர்

வாழ்க்கை நெறி அத்தனையும்

வான்மறையில் இணைத்தாய் !

ரஹ்மானே நபிவேந்தை

உன் தூதாய் (தேர்ந்து) எடுத்தாய் ! – உன்

நலமான வெகுமதியாய்

தீனைத்தானே கொடுத்தாய் !

யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !

சுபுஹானல்லாஹ் !

(உயர்)

முன்மாதிரி ஏதுமின்றி

முழுதுலகைப் படைத்தாய் ! – எங்கள்

முகவரியாய் ‘முஹம்மதெ’னும்

நபி நூரைக் கொடுத்தாய் !

உன் மாதிரி யாருமில்லை

உலகினிலே அல்லாஹ் ! – உன்

ஒருவனுக்கே ‘சஜ்தா’க்கள்

குவித்திடுவோம் அல்லாஹ் !

யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !

சுபுஹானல்லாஹ் !

(உயர்)

 

( உயிர் கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் ….. என்ற பாடல் மெட்டு )

இசைமுரசு நாகூர் ஹனீஃபா பாடியது

 

நன்றி :

மணிச்சுடர் ஈகைத்திருநாள் சிறப்பு மலர் 1998

News

Read Previous

கல்கத்தா தேசிய நூலத்தில் தமிழ் நூல்கள் !

Read Next

ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *