உதவி

Vinkmag ad
🤜 உதவி 🤛 -நெல்லை ஆடலரசன்@Natarajan
தேவையில்லாததை தூக்கி தருவதல்ல உதவி
தேவையானபோது தூக்கி தருவதே உதவி
தன்னிடம் உள்ளதை தானமாய் தருவதல்ல உதவி
தன்னமில்லாத உள்ளத்தை தனமாய் தருவதே உதவி
ஊருக்கெல்லாம் தெரிந்து ஒருவருக்கு செய்வதல்ல உதவி
ஊரிலொருவருக்கும் தெரியாமல் ஒவ்வொருவருக்கும் செய்வதே உதவி
தன்னை தனக்கு தெரிந்தவருக்கு செய்வதல்ல உதவி
 உன்னை உனக்கு தெரியாதவற்கும் செய்வதே உதவி
காலமெல்லாம் செய்யும் அனைத்துமல்ல பெறும் உதவி
காலத்தில் செய்யும் அணுவளவாயினும்  அதுவேபெரும் உதவி
காலனின் பதிவேட்டில் கணக்கெடுக்கப்படும் பதிவல்ல உதவி
காலத்தினால் பதிவிடப்படும் கணக்கிலடங்கா பதிவே உதவி
யாசித்து கேட்டு பெறுவதும் தருவதுமல்ல உதவி
யோசிக்காமல் நீட்டி பொறுத்தமாய் தருவதே உதவி
ஊனமுற்றோருக்கு தானமாய் உழைப்பின்றி தருவதல்ல உதவி
மாற்றுத்திறனாளிகளென தன்மான உழைப்பிற்கு தருவதே உதவி
செய்ததை ஊரெங்கும் சுவரொட்டி ஒட்டுவதல்ல உதவி
செய்வதை உளமெங்கும் படரவிட்டு ஓடுவதே உதவி
ஓரே கையால் இருப்பதை வாங்கும்கைதாழ தருவதல்ல உதவி
இரு  கையால் எல்லாவற்றையும் கொடுக்கும்கைதாழ தருவதே உதவி
 
நெல்லை ஆடலரசன்@Natarajan 
 
ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும் 
 
 © நெல்லை ஆடலரசன்@Natarajan – 2017

News

Read Previous

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…

Read Next

இந்திய ரூபாயின் சுவையான வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *