இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

Vinkmag ad

இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

என்றும் எங்கும்
நலமே விழைக
ஏற்றங்களாலே
இறையவன் காக்க
துன்பம் தொலைக
துயர்கள் அழிக
இன்பம் நிறைக
இனியவன் அருள்க…

சாந்தி தழைக்க
சமாதானம் நிலவ
காந்தியின் தேசம்
கருணையால் பூக்க
மாச்சரியம் நீங்க
மாண்புகள் பெருக
ஆச்சரியங்களாக
அனைவரும் வாழ்க…

போர்ப்பகைப் பூசல்
போயெங்கோ அழிக
நீர்ப்பந்தல் நிறைந்து
நிலவளம் பெருக
ஊர்பந்த உறவுகள்
உலகெலாம் வாழ
சீர்நிறைப் பெரியோன்
சிறப்புகள் அருள்க…

-அத்தாவுல்லா…

News

Read Previous

அமைதி

Read Next

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *