இறைவா. இறைவா. இறைவா

Vinkmag ad

இறைவா. இறைவா. இறைவா
——————————————
இருகரம் ஏந்துகிறோம் இறைவா
இன்னல்கள் தீர்த்து விடு இறைவா
இன்னுயிர் ஈந்தவனே இறைவா
இன்பமுடன் வாழச்செய் இறைவா

கண்களில் ஒளிர்ந்தவனே இறைவா
கல்பினில் நிறைந்தவனே இறைவா
கருத்தினில் கலந்தவனே இறைவா
கனிவுடனே வாழச்செய் இறைவா

உறவுகள் மலரச்செய் இறைவா
உள்ளங்கள் மகிழச்செய் இறைவா
உண்மையின் உறைவிடமாய் இறைவா
உத்தமராய் வாழச்செய் இறைவா

மன்னித்தலை ஏற்பவனே இறைவா
மாநபியைத் தந்தவனே இறைவா
மாமறையை நெஞ்சில் ஏந்தி இறைவா
மாண்புடனே வாழச்செய் இறைவா

ஓரிறை உன்னைத்தான் இறைவா
ஒன்றுபட்டு வணங்கச்செய் இறைவா
ஓரணியில் நிற்கச்செய் இறைவா
ஒற்றுமையாய் வாழச்செய் இறைவா

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

காலம்

Read Next

உதவி

Leave a Reply

Your email address will not be published.