இன்று ஈ.வெ.கி.சம்பத் நினைவு தினம் – 1977

Vinkmag ad

23.02.2019
சனிக்கிழமை

👉இன்று ஈ.வெ.கி.சம்பத் நினைவு தினம் – 1977

ஈ.வெ.கி.சம்பத் நீதிக்கட்சியிலும்  பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர்.

சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் – அண்ணா, இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன் ஆகியோர்)

1961ல் திராவிட நாடு கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.  கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்களாகும்.
〰〰〰💔💔💔〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.

🎼அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா

கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
கையே என்னை அடித்ததம்மா

அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்

தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்

கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்

இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா

கண்ணை இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா..
〰〰〰🎙🎙〰〰〰〰
🙏🏻வாழ்த்துக்களுடன்.. கண்ணன்சேகர்
9698890108

News

Read Previous

புதிய இந்தியா

Read Next

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *