இணைந்து இருப்போம்

Vinkmag ad

இணைந்து இருப்போம்
———————–
மதம் நமது
தேசமக்களின்
மாறா நம்பிக்கை

அனைத்து மதத்தினர்களும் அவர்கள் நம்பிக்கை சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்வது இயல்பே

அது போலதான்
இஸ்லாமிய உறவுகளும்
கலந்துகொண்டனர்

நோய் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என இதுவரை தெளிவாக தெரியவில்லை

அனைத்து மத கூட்டங்கள்
நடப்பது போலவே
அவர்கள் கூட்டமும்
வழக்கம்போல் நடந்தது

இந்த நேரத்தில்
இஸ்லாமிய சகோதர சகோதரிகள்
உடன் நின்று அவர்களுக்கு அன்பையும் ஆற்றுதலையும் தரவேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை

இறைவனைத்
தொழுவே
இப்பிறவி என வாழும்
நோய்தொற்று ஏற்பட்ட
இஸ்லாமிய உறவுகள்
நலம்பெற
எல்லாம் வல்ல
இறைவன்
அளவற்ற அருளாலும்
நிகரற்ற அன்பாலும்
கருணைபுரிய வேண்டும்

வேற்றுமையில்
ஒற்றுமையே நம்
தேசத்தின் பலம்
என்பதை நாம்
உலகுக்கு உணர்த்தவேண்டிய
உன்னத தருணம் இது

கூடாரங்கள்
தனித்தனியாக
இருந்தாலும்
இந்த இக்கட்டான நிலையில்
இந்தியர்கள் அனைவரும்
எவரையும் குறைகாணாது
இதயத்தால்
இணைந்து இருப்போம்.

பா.திருநாகலிங்க பாண்டியன்
கீழச்சிறுபோது

+91 95001 51540

News

Read Previous

மறுமையின் நினைவலைகள்

Read Next

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *