இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம்

Vinkmag ad

டிச – 12 இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம்.

திருமலையில் புகழ்பாடும் திருசுப்ர பாதம்
தேனிசைக் குரலாலே தினந்தோறும் ஒலிக்கும்!
உருகிடும் மலையென ஒவ்வொரு இதயம்
பருகியே இசைதனை பாரெல்லாம் களிக்கும்!
குருமுதல் தாயென கொண்டிடும் இசையால்
குழந்தையின் குரலாலே கோகுலம் செழிக்கும் !
கருவான காலத்தில் கற்றாறோ பாடம்
கானத்தை கேட்டுதான் காலையே விழிக்கும் !

காற்றிலே கீதமென கருத்திலே நின்றிட
காந்தியும் வாழ்த்திட காலத்தை வென்றார்!
ஊற்றோடும் இசையினால் உள்ளத்தை கொய்திட
உளம்கனிய நேருவின் ஊக்கத்தைப் பெற்றார்!
பற்றோடு ஐநாவில் பாடல்கள் பாடிட
பார்போற்ற இசையினை பன்னாட்டில் பொழிந்தார்!
நற்தமிழ் பாரதியின் நாளும்பல பாடலை
நயமுடன் பாடியே நாட்டடிமை ஒழித்தார்!

திரையினில் வெற்றியை தந்திட்ட மீரா
தித்திக்கும் கல்கியை தொடங்கிட வைத்தார்!
கரையிலா அலையென கைநிறைய உதவி
கனிவாக செய்தே கடமையை தைத்தார்!
குறை ஒன்றுமில்லை கோபாலன் பாடல்
குவலயம் ரசிக்க கொடையென தந்தார்!
மறைந்தாலும் வாழும் மாபெரும் இசையால்
மண்ணுலகு மீதிலே மலர்ந்திட நின்றார்!

-ப.கண்ணன்சேகர், திமிரி. 9698890108.

News

Read Previous

அமீரகம் !

Read Next

குணசீலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *