அன்பே

Vinkmag ad

அன்பே

 

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

                  தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

  • மலர் சூட நீவருவது

அழகுதான் !

அதை விட மலர்ந்த முகத்துடன் வா

மிகுந்த அழகு !

 

  • நெத்திச்  சூடியை விட

நிரந்தர அழகு

புத்தியால் சூடு

 

  • அணிந்துக் கொள்

காதில் தோடு !

அதை விட அழகு

நல்ல விசயங்களுக்கு

உன் காதைக் கொடு !

 

  • எதுக்குப் பவுடர் ?

முகத்துக்கு அழகு

புன்னகையால் பூசு!

 

  • ஒதுக்கு லிப்டிக்கை ,

உதட்டுக்கு அழகு

பிறர் மனம் புண்படாமல் பேசு !

 

  • மூக்குத்தியெல்லாம்

எனக்குப் பிடிக்காது !

மற்றவரைக் குத்திப் பேசாதே

அது போதும் !

 

  • நீ கொலுசு அணிந்து வருவது

 

அழகுதான்  !

 

பணிவாய் பூமியில் நடந்தது வா

 

அது அதை விட  மிகுந்த அழகு !

 

 

  • அன்பே

 

ஆபரணங்கள் நாளாக சேதாரமாகும் !

 

அழகிய குணங்களால்

உன்னை அலங்கரித்துக் கொள் !

அதுவே அழியாத ஆதாரமாகும் !

 

 

**********************************************************************

 

News

Read Previous

தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில : முனைவர் மு.பழனியப்பன்

Read Next

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *