அடக்கம்,எம் வாழ்வா கட்டும்!

Vinkmag ad

26-01-2016
=அடக்கம்,எம் வாழ்வா கட்டும்!=
[அகனின் கவிதை 274380 படித்து, எழுதியது]

ஆதார நதியாய்ப் பாய்ந்தே
======அளித்தனை பூக்கள் காய்கள்!
சேதார மாக ஓடிச்
=======சேர்ந்தனை கடலை! நாங்கள்
ஊதாரி யாக நின்றோம்!
=======உன்பயன் கொள்ள வேண்டி,
ஆதாரக் குளங்கள் ஏரி
========அமைத்தனம்! தீங்கங்(கு) இல்லை!

வேதாவின் கருணை யென்றே
==========விரும்பிடாப் போதும் மக்கள்
பூ,தாது போலப் பெற்றோம்!
========போதாமை வளரக் கண்டோம்!
ஆதாரக் குளங்கள் ஏரி
========அனைத்திலும் மனைகள் செய்தோம்!
சேதாரம் இதுபோல் தோன்றும்
========சிந்தனை யில்லார் ஆனோம்!

விண்ணின் நின்று இறங்கி வந்து
===========வியத்தகு பணிவு கூட்டிப்
பண்ணொலி பாடி, ஓடிப்
===========பரவசம் பகிர்ந்து நின்ற,
தண்மையை மறந்து,உன் பாதை
===========’தவிர்த்ததை’ உணரா நின்றோம்!
கண்ணினுள் விரல்விட் டாற்போல்
============காட்டினை இன்று ணர்ந்தோம்!

எண்ணிடின் இது,எம் தப்பே!
============இனியொரு வழி,யோ சிப்போம்!
மண்ணுயர் இனமென்று எம்மை
===========மனத்து, ஒரு கருவம் கொண்டோம்!
தண்மையாய்ப் பிற,உ யிர்கள்
============தழுவியே வாழ்ந்த உன்னில்
உண்மையை உணர்ந்து கொண்டோம்!
============உயர்செயல் செய்து வாழ்வோம்!

கூடிவாழ் கின்ற தென்ற
==========கொள்கை,ஓர் இனத்திற்கு அல்ல!
கோடியாய்ப் பெருகி விட்டால்
===========குவலயம் ஆளற்கு இல்லை!
தேடிய காக்கா விட்டால்
===========திறமைகள் பேசற்கு இல்லை!
ஆடி,நீ காட்டிச் சென்ற
===========அடக்கம்,எம் வாழ்வா கட்டும்!
******** ++ ******

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

அன்பன்

எசேக்கியல்

 

News

Read Previous

அக்ஸாவும் அய்யூபியும்

Read Next

இந்தியக் குடியரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *