இந்தியா மைனாரிட்டி எம்பவர்மெண்ட் பிரண்ட்

Vinkmag ad

‘’இந்தியா மைனாரிட்டி எம்பவர்மெண்ட் பிரண்ட்

நாளை நமதே!’

 

இந்திய திருநாட்டில் முஸ்லிம் மைனாரிட்டியாக உள்ள மக்கள் படிப்பு, வேலை வாய்ப்பு, ஆகிய வற்றில் மிகவும் பின் தாங்கிவர்களாக இருக்கின்றார்கள் என்று தேதிய வேலை வாய்ப்பு நிறுவனம்(NSSO) அறிக்கை கூறுகின்றது. பட்டப் படிப்பு முடித்த 15 சதவீத முஸ்லிம் பட்டதாரிகளே வேளை வாய்ப்பில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஹிந்து பட்டதாரிகள் 7 சதவீதம் தான் உள்ளனர். பள்ளிக் கல்வி முடித்த 10 சதவீத முஸ்லிம்கள் தான் வேளையில் உள்ளனர். அதே நேரத்தில் ஹிந்துக்கள் 48 சதவீதம் உள்ளனர் என்றும் கூறுகின்றது.

 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. எஸ். வர்மா கூறும்போது முஸ்லிம்கள் நீதித்துறையில், நிதித்துறையிலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ளனர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கென்று சிறைச் சாலை நிறையவே உள்ளன என்று உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அநீதிக்குக் குரல் கொடுத்தால்இம்என்றால் கைது, ‘இச்என்றால் சிறையாக உள்ளதும் உங்களுக்குத் தெரியும்.

 

சோற்றுக்கு தொடுவற்கு நாக்கிற்கு ருசியான ஊறுகாய் போல 3.5 இட ஒதுக்கீடு கொடுத்து முஸ்லிம்களை ஊறுகாயாக முயற்சிப்பதும் உங்களுக்குத் தெரியும்அந்த ஊறுகாய் போன்றுள்ள இட ஒதுக்கீடு சலுகை முஸ்லிம்களுக்கு ஒழுங்காக கிடைக்கின்றதா என்றறிய ஒரு ‘Monitoring committee’ அதாவது கண்காணிப்பு குழு இன்னும் அமைக்கப் படவில்லை என்பது பரிதாபமான நிலையாக உங்களுக்குத் தெரியவில்லையா  சகோதர சகோதரிகளே

வரும் 2021 ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்திலோ தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள், நடிகர் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு உள்ளன. தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் ஓட்டு அதிகமாக உள்ள 40 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் நமது முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மொத்தம் 10 கூட இல்லை என்பது பரிதாபமாக தெரியவில்லையா!

அதிலும்  சென்னை துறைமுகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். துறைமுகம் மண்ணடி சாலை விநாயகர் தெருவில் வாழ்ந்த V. செல்வராஜ் 1991-1996க்கு பின்பு துறைமுகம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் துறைமுகம் தொகுதியில் வாழ்ந்தவர்களில்லை. அதனால் செலவராஜ் போலவோ அல்லது மாமன்ற உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் போலவோ பல ரோடு வசதி, தண்ணீர் பற்றாக்குறை, பாதாள சாக்கடை, மழை தண்ணீர் தேங்குதல் அதனால் கொசுத் தொல்லை, ரோட்டினை கடக்கக் கூடிய சிக்னல், எஸ்கலேட்டர், சுரங்கப் பாதை வசதி, தொழிலாளர் சிறுநீ, மலம் கழிக்க பொது கழிப்பிடம், குப்பைகள் சேரவிடாமல் அகற்றுதல் போன்ற பொது காரியங்கள் கவனிப்பாரற்று உள்ளன.அதனை தட்டிக் கேட்க இந்தப் பகுதியில் வாழும் உறுப்பினர் இல்லாத நிலை உள்ளது. அந்தக் காலத்தில் மனுநீதிச் சோழன் தனது அரண்மனை வெளியே நீதி கேட்க ஒரு மணியினை கட்டி வைத்து நீதி கொடுத்தான் என்ற வரலாறு. ஆனால் நமது சட்டமன்ற அலுவலகம் எஸ்பிளனேட் ராஜா அண்ணாமலை மன்றத்திற்கு எதிரே இருப்பதால் மக்கள் குறை கேட்க முடியாத அளவிற்கு எப்போதுமே பூட்டியே உள்ளது என்ற நிலையினை நீங்கள் தினந்தோறும் காணலாம்.

தேர்தல் ஜுரம் ஏற, ஏற யார், யாரோ, எங்கிருந்தவர்களோ இந்த துறைமுக மக்கள் இழிச்ச வாயர்கள் என்று எண்ணி முழு அளவு டிஜிட்டல் போஸ்டரில் போட்டியிடப் போவதாக தெரிவித்து ஒட்டி உள்ளதினைப் பார்த்த நடைப் பயிற்சியில் உள்ள தாத்தா முத்தையப்பன் தெருவில் குடியிருக்கும், முஸ்லிம் அல்லாத நண்பர் இன்று 9.1.2021,’ஏன் சார் துறைமுகம் தொகுதிக்கு சம்பந்தமில்லாமல் யார், யாரோ போட்டியிட முயற்சி செய்கிறார்கள், நீங்கள் இந்த தொகுதியிலேயே குடியிருக்கின்ரீர்கள், படித்து டாக்டர் பட்டம் பெற்று, உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள், இந்த தொகுதி உங்களுக்கு அத்துப்படி, நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாதுஎன்று கேட்டது  எனக்கு நெற்றியில் அடித்தது போல இருந்தது. எனக்கு கொம்பு சீவி வேடிக்கை பார்க்க நினைன்றாரோ என்று எண்ணவும் நேர்ந்தது, அதே நேரத்தில் அவர் சொல்லுவதில் உண்மையிருப்பதாகவே உணர்ந்தேன்.

அந்த நண்பர் கேட்ட கேள்வி போன்று நான் உங்களைக் கேட்கின்றேன். படித்து, சமூக துடிப்புள்ள இளைஞர்கள் அந்த 40 முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் உள்ளனர். அவர்கள் ஏன் போட்டிபோடக்கூடாது.

அதற்கான அடித்தளமாகஇந்தியா மைனாரிட்டி என்பவர்மெண்ட் பிரண்ட்என்ற அமைப்பினை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். அதற்கான ஆலோசனை உங்களிடம் இருந்து, பெயர், விலாசம், மெயில், போன் போன்றவற்றினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்:

நிறைவாகநான் ரெடி, நீங்கள் ரெடியா

விலாசம்:

Dr.A.P. MOHAMED ALI, PH.D; I.P.S(R)

47, புட்டி சாஹிப் தெரு,

ஜார்ஜ் டவுண், சென்னை-1

போன்: 9444042213-04425264235

mdaliips@yahoo.com 

 

News

Read Previous

மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Read Next

ஏர் இந்தியாவின் நீண்ட தூர விமானம் பெங்களூரு வந்து சேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *