அம்ரிதா இயற்கை அறக்கட்டளை

Vinkmag ad
அன்புள்ள நண்பர்களுக்கு,
எனது இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை  சென்ற ஆண்டு 30.3.2020 முதல் “ஆந்தையாரின் வகுப்பறை” என்ற பெயரில்,  கொரோனா நோய் தொற்று முடக்க காலங்களில் இணையத்தின் வழியாக செயல்பட்டோம். வீட்டில் அடைபட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன் உள்ள வகையில்  இயற்கை, வனவுயிர்கள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றிய பல செய்திகளை 125 தொடர் வகுப்புக்களாக அவர்களிடம் எடுத்துச் சென்றோம்.  இப்போது பல பள்ளிகள் செயல் பட துவங்கிய நிலையிலும், மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்தே இணையத்தின் வழியாக கல்வி புகட்டப்படும் காரணத்தால் ஆந்தையாரின் வகுப்பறை தற்காலிக விடுப்பை விடுத்தது. இனி வரும் காலங்களில் மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி அனைத்து பள்ளிகளும் இந்த ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என்று கருதுகிறோம்.
அவ்வாறு செயல் படத்துவங்கும் நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் “ஆந்தையாரின் நூலகம்” ஒன்றை துவங்க எண்ணி உள்ளோம். இதன் முதல் கட்ட சோதனை முயற்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள 20 அரசு  பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம்.  இப் பள்ளிகளில் ஒரு தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு இயற்கை, சுற்றுச் சூழல், அறிவியல் மற்றும்  குழந்தைகளுக்கான கதைகளை சொல்லும் பல நூல்களை  மாதம் தோறும் தொடர் சுற்றின் வழியாக  அறிமுகப் படுத்த உள்ளோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு இயற்கை மீதான ஆர்வமும், தெளிவும்
 சென்று அடைவதுடன், அவர்களின் வாசிப்புத் திறனும் அதிகரிக்கும். மேலும், இதற்கான தன்னார்வ பணியில் கல்லூரி மாணவர்களும், பல ஆசிரியர்களும் இணைகிறார்கள். எனவே, மூன்று தலைமுறை மக்களை ஒரு நேர்கோட்டில் இணைக்கும் வாய்ப்பையும் “ஆந்தையாரின் நூலகம்” ஏற்படுத்தி தருகிறது.
ஆந்தையாரின் நூலகத்திற்கு உதவ  நீங்கள்  விரும்பினால்,  உங்கள் வீட்டு  குழந்தைகள் படித்த, நல்ல நிலையில் உள்ள   குழந்தைகளுக்கான இயற்கை, சுற்றுச் சூழல், அறிவியல் மற்றும்   கதைகளை கொண்ட  நூல்களை எங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பலாம். புதிய புத்தகங்களை வழங்க விரும்புவோர் வங்கியின் மூலம் பணமாகவோ, அல்லது பதிப்பகத்தினரிடம் பணம் செலுத்தி எங்கள் முகவரிக்கு  புத்தகங்களை கொரியர் செய்திடச்  செய்யலாம். இந்த பதிவுடன் எங்களின் முகவரியையும் இணைத்துள்ளேன். நூல்களை வழங்க முன் வரும் நண்பர்கள் 7598672787, 9843136786 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.
வளரும்  தலைமுறையிடம் “இந்த புவியை அழிக்காமல் வாழும் கலை” யை  பேச  புத்தகம் என்னும் அறிவுக் கண்ணை பெற்றுத் தருவோம் வாருங்கள். கற்போம்… கற்பிப்போம்.
தொடர்புக்கு,
N. Raveendran
Iragukal amritha nature trust,
61, Ramachandra Thadaga street,
Thirumangalam,
Madurai – 625 706
Phone: 7598672787
Whatapp: 9843136786
Mail: iant.ravee[at]gmail.com

News

Read Previous

பிப்.27, முதுகுளத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

Read Next

சோளத்தட்டை நாயகர்கள்

Leave a Reply

Your email address will not be published.