கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

Vinkmag ad
ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.

வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.
குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.
அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது. இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர். இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள்.
மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது. மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்

News

Read Previous

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Read Next

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *