வேலைநேரத்தை அடிக்கடி மாற்றுபவரா நீங்கள்?

Vinkmag ad
வேலைநேரத்தை அடிக்கடி மாற்றுபவரா நீங்கள்?

வேலைநேரங்களை அடிக்கடி மாற்றுவதால் (Work Shifts) உடற்பருமன், இதயக் கோளாறுகள் போன்ற உடல்நல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நீண்ட காலமாகவே மருத்துவர்கள் அறிந்த செய்திதான். 2016 ஜூன் 2 நாளமில்லா சுரப்பியல் இதழில் (Journal of Endocrinology) வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை ஒழுங்கற்ற வாழ்வியல் முறை மூளைக்கு பாதிப்பையும் கொணரக்கூடியது என எச்சரிக்கிறது. நாம் எப்போது உறங்க வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எப்போது வேறு உடலியல் சார்ந்த இயக்கங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்  என்பதை மனித உடலினுள் உள்ள உடற்கூறியல் கடிகாரங்கள் இரவு, பகல் நேரத்தோடு பொருத்தி வைத்துள்ளன என்கிறார் டெக்சாஸ் உடல்நலக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஏனர்ஸ்ட்.  எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்த இவரது குழுவினர் வேலைநேரங்களை அடிக்கடி மாற்றுவது மூளையைப் பாதிப்பதோடு உடலியக்கத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது எனக் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரே நேர அட்டவணையைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதும் அது மனச்சோர்வை அளிக்கக்கூடியது என்பதும் உண்மைதான். அதே சமயம், பகல் நேர வேலை, இரவு நேர வேலைகளை அடிக்கடி மாற்றுவோர் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கிறோமா, இதயம் ஆரோக்கியமாகச் செயல்படுகிறதா என்பதை கவனித்துவருவது முக்கியம், கலோரி அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது, புகை பிடித்தலைத் தவிர்ப்பது ஆகியவையும் முக்கியம்தான்.
(உதவி : 2016 ஆகஸ்ட் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ் ஸ்பெக்டரம் பகுதியில் வெளியான கட்டுரைகள்)

News

Read Previous

1000 கவிஞர்கள் கவிதைகள்

Read Next

புகழுக்கும் இறுதி உண்டோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *