ராஜஸ்தான் முதல் ‘‘மெர்சல்’’வரை…

Vinkmag ad

https://www.ndtv.com/opinion/from-rajasthan-to-mersal-a-bad-week-for-democracy-in-india-1766287

ராஜஸ்தான் முதல் ‘‘மெர்சல்’’வரை…
பிருந்தா காரத்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கரிமடி கிராமத்தில்பசிக் கொடுமைக்கு உயிரிழந்த 11 வயதுக்குழந்தையான சந்தோஷ் குமாரியின் தாய்கொய்லி தேவி, உள்ளூர் குண்டர்களால் தாக்கப்பட்டதால் தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவரதுகுழந்தை பசிக் கொடுமைக்கு பலியாகவில்லை, மாறாகமலேரியா காய்ச்சலினாலேயே உயிரிழந்தார் என அரசுத்தரப்பில் சொல்லப்பட்டதை இந்த ஏழைத் தாய் எதிர்த்தார்.மேலும், ஆதார் அட்டை இல்லாத எவருக்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் கிடையாது என அரசு பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே தனது குழந்தை உயிரிழக்க நேர்ந்ததுஎன்பதனை துணிவுடன் வெளியில் சொன்னார். அவர்உண்மையையே பேசினார். அதற்காகவே தாக்கப்பட்டார்.குழந்தை மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை உள்ளூர் உதவி செவிலியர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த செவிலியர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு எடுக்கும் நிலைப்பாட்டிற்கு உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளுங்கள் என்ற மிரட்டலையே இந்நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஏன் உயிர் வாழ்கிறீர்கள்?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் போலியானவை எனச் சொல்லப்பட்டு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டன. ஆதார் எண்ணுடன்இணைக்கப்படாத கணிசமான கார்டுகளின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதனை சரி பார்ப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் இருக்கவில்லை. தங்களது கார்டுகள்போலியானவை அல்ல என்பதனை நிரூபிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பும் அக்குடும்பங்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரேசன் கார்டுகளும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியாவில், உங்களது விரல் ரேகையை அதற்கான இயந்திரத்தால் அடையாளம் காண இயலவில்லை எனில், நீங்கள் உயிர் வாழ்வதை நிறுத்திவிட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் குறைதீர்ப்பு நடைமுறை ஏற்படுத்தப்படுத்துவது தேசியஉணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 15இல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பல லட்சம்ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையைஏற்படுத்துகிற, ரேசன் கார்டை ரத்து செய்வது என்பதுபோன்ற அநியாயமான முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அடிப்படையான உரிமையை கொய்லிதேவி போன்றோரின் குடும்பங்கள் பயன்படுத்திட இயலும்.ஆனால், பெரும்பாலான மாநிலங்களைப் போலவே ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இத்தகைய ஜனநாயக நடைமுறைஏற்படுத்தப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

உடன்படுங்கள் அல்லது விளைவைச் சந்தியுங்கள்

தமிழகத்தில் வேறொரு நிலைமை உருவாகியுள்ளது. ஆனால், அங்கும் விடுக்கப்பட்டுள்ள செய்தி – எங்கள்நிலைப்பாட்டோடு உடன்படுங்கள் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளுங்கள் என்பதேயாகும்.

ஜிஎஸ்டி வரி பற்றி விமர்சிக்கும் வசனம் இடம் பெற்றிருப்பதால் “மெர்சல்” திரைப்படம் தமிழகத்தில் பாஜக தலைவர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளது. சுகாதாரத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள், அநியாயங்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. இந்தியாவை விட குறைவான விகிதத்தில் வரி வசூல் செய்யும் சிங்கப்பூரில் மருத்துவ சேவை இலவசமாகக் கிடைப்பதாக விமர்சனக் கருத்தை கதாநாயகன் முன்வைக்கிறார்.

“அறிவிலிகளான” திரைக்கலைஞர்கள் மட்டுமல்ல, எவரொருவரும் மோடி அரசின் “அருஞ்சாதனைகளை” விமர்சித்திட எவ்வாறு துணிந்திடலாம்? இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், நிச்சயமாக தமிழகத்தில் உள்ள பெட்டிக் கடைக்காரர்கள், வர்த்தகர்கள் அல்லது சிறு வணிகர்கள் கடுமையான சிரமத்தில் இருந்தாலும் இவ்வாறு விமர்சிக்கலாமா? தணிக்கைக் குழுவால் திரைப்படம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை யார் அக்கறை கொள்கிறார்கள்?

மத்திய அரசை விமர்சிப்பவர்கள் அனைவரையும் தேசநலனுக்கு எதிரானவர்கள் என மோடியும், அமித் ஷாவும்முத்திரை குத்தி வருகையில், தங்களது தலைவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டிய பொறுப்பு பாஜகவின் மாநில நிர்வாகிகளுக்கு இருக்கிறதல்லவா? திரைப்படத் தயாரிப்பாளர்களும், கதாநாயகன் விஜய்யும் அவதூறாகப் பேசப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள். மேலும், திரைப்படத்தின் காட்சி வெட்டப்பட வேண்டும் என்ற மிரட்டலும் பாஜக தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் மீது தொடுக்கப்படும் இத்தகைய ஒட்டுமொத்த தாக்குதல்களுடன், இத்தகைய வசனங்களைப் பேசிய நடிகர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால் மதச்சாயமும் இதற்கு பூசப்படுகிறது. கொடுமைப்படுத்துவது, தொடர்ந்துதொல்லை கொடுப்பது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் கலைஞர்களுக்கு எதிராக வெட்கங்கெட்ட முறையில் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதைக் காட்டுகின்றன.

அதிகாரத்தில் இருந்தால் ஊழல் செய்யலாம்! 

அதே நேரத்தில், நாட்டின் மற்றொரு பகுதியான ராஜஸ்தானில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கக்கூடிய வகையில் மாநில அரசு கிரிமினல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) அவசரச் சட்டம், 2017 (Criminal Laws (Rajasthan Amendment) Ordinance, 2017) என்றபெயரிலான கொடூரமான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை சட்டத்திலிருந்து பாதுகாத்திட இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. கிரிமினல் நடைமுறை விதிகள் 1973 மற்றும் இந்திய குற்றவியல் சட்டம்1980 ஆகியனவற்றில் முன்மொழியப்பட்ட இத்திருத்தங்கள், தனிநபர் அளிக்கும் புகார்கள் குறித்து நீதிமன்றங்கள் எந்தவொரு விசாரணை மேற்கொள்வதிலிருந்தும் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன. 

தனிநபர் புகார்களையடுத்து, அரசு அலுவலர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி எவ்விதநீதிமன்ற விசாரணை நடத்துவதை தடுக்கிறது. எனினும், விசாரணைக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரி அளிப்பதற்கான கால அவகாசம் முன்னெப்போதும் இருந்திராத வகையில் ஆறு மாதமாக அதிகரிக்கப்பட இம்மசோதா வழிவகை செய்கிறது. 

இந்த ஆறு மாதகாலத்தின்போது எந்தவொரு நீதிமன்றத்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க இயலாது. அதிகாரியின்அனுமதி கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட பிரச்சனைகுறித்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இன்னமும் மோசமானதாகும். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் யார் என்ற அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது எனில், அதற்கு காரணமான நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். இம்மசோதாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றங்களும் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகக் கூடியவையே என்பது அனைவரும் அறிந்ததே.தேர்தல் கமிஷனின் செயல்பாடு எழுப்பிய கேள்வியேகடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் முன்னின்றது.இம்மாதத்தின் முதல் வாரத்திலேயே இமாச்சலப் பிரதேசமாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டபோதும், ஏன் குஜராத் மாநிலத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்பதற்கு எந்தவிதநியாயமான காரணங்களும் இதுவரை சொல்லப்படவில்லை.

குஜராத் சட்டமன்றத்தின் காலம் ஜனவரி 22, 2018 உடன் நிறைவு பெறுகிறது. அதே நேரத்தில் இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்தின் காலம் ஜனவரி 7ஆம் தேதியுடன்நிறைவு பெறுகிறது. குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதிகள் இன்னமும் அமலுக்கு வரவில்லை. பிரதமர் தனதுசொந்த மாநிலத்தில் அறிவித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ளதிட்டங்களுக்கான வாக்குறுதிகளில் தேர்தல் ஆணையம்தலையிடவுமில்லை.

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது “சந்தேகத்திற்கு இடமளிக்கிறது” என இரண்டுமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளனர். சுதந்திரமாகவும்,நேர்மையாகவும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் சாசனத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை அதன் நம்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது.ஆனால் இறுதியில், ஜனநாயகத்தின் தலைவிதியை மக்களே நிர்ணயிப்பார்கள்.

“ஆனால், மன்னர் ஆடையின்றிஇருக்கிறாரே” என குழந்தைப் பருவத்தில் நாம் கேட்ட கதைகளில் வரும் குழந்தை கூக்குரலிடுவதைப் போல, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையைப் பேசுகிற குரல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல அறிகுறியே ஆகும்.

(நன்றி : என்டிடிவி.காம்)

தமிழில் : ராகினி

News

Read Previous

பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா

Read Next

என் விருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *